General

டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் புதிய விளம்பரப் பிரச்சாரத்தில் நடிகை கஜோல் இணைகிறார்: இந்தியாவின் நம்பர் 1 ராக் சால்ட் என கஜோல் பாராட்டு!

சென்னை, 20 ஜூன் 2024: இந்தியாவின் பிராண்டட் அயோடின் கலந்த உப்பு பிரிவில் முன்னோடியாகவும், சந்தையில் முன்னணி வகிக்கும் ப்ராண்டாகவும் திகழும் டாடா சால்ட், தனது டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் [Tata Salt Himalayan Rock Salt]-க்கென அனைவரையும் கவரும் ஒரு புதிய பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. முன்னணி நடிகை கஜோல் இடம்பெறும் இந்த விளம்பரப் பிரச்சாரம், டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட்டை கஜோல் பாராட்டுவதை அழகுடன் காட்சிப்படுத்திருக்கிறது. இந்த விளம்பரப் படத்தில் தேசத்தின் முதன்மையான இந்து உப்பு (தேஷ் கா நம்பர் 1 ராக் சால்ட்) ஆக இந்த பிராண்ட் முன்னணியில் இருப்பதை எடுத்துரைக்கிறது. கஜோல் டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட்டின் உயர் தரத்திற்கு உறுதியளிப்பதோடு, மிகவும் நம்பகமான ப்ராண்டான டாடா உடனான இதன் நெருங்கிய உறவு, எப்படி இத்தயாரிப்பை மற்ற இந்து உப்புகளிலிருந்து மாறுபட்ட சிறந்த இந்து உப்பாக இருக்கிறது என்பதை இந்த விளம்பரப் பிரச்சாரம் வலியுறுத்துகிறது.

டாடா சால்ட்டின் பல்வேறு உயர்ரக தயாரிப்புகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து ப்ரீமியம் தரத்திலான இந்து உப்பை வழங்குவதை டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் உறுதி செய்கிறது. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தால் தனது நன்மைகளை தரும் குணாதிசயத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட ராக் சால்ட் எனப்படும் இந்து உப்பு, இப்போது ப்ரீமியம் தரத்திற்காக பெயர் பெற்ற டாடா பிராண்ட்டின் தரமுத்திரையுடன் வருகிறது. இந்த ப்ராண்ட் மீது வாடிக்கையாளர்கள் கொண்டிருக்கும் மாபெரும் அன்பானது, டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட்டை நாட்டின் நம்பர் ஒன் இந்து உப்பாக உருவாக்கி இருக்கிறது.

இந்த விளம்பரத்தில் டாடா சால்ட் உடன் இணைந்து செயல்படுவது குறித்து நடிகை கஜோல் கூறுகையில், “நான் வளர்ந்த போது பயன்படுத்திய டாடா சால்ட் போன்ற ஒரு தனித்துவம் வாய்ந்த ப்ராண்டுடன் இணைவது எனக்கு கெளரவமாக இருப்பதோடு, பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்து உப்பு என்பது இந்தியாவின் பண்டைய பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகவே இருந்து வந்திருக்கிறது. மேலும் இதன் உடல் ஆரோக்கியத்தில் இதன் அளிக்கும் பல நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது. டாடா நிறுவனத்தின் நம்பிக்கை மற்றும் உத்தரவாதத்துடன் வரும் டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் முழு குடும்பத்திற்கும் ஏற்ற மிகச் சிறந்த தயாரிப்பாக இருக்கிறது” என்றார்.

டாடா நுகர்வோர் தயாரிப்புகளின் பேக்கேஜ்டு ஃபுட்ஸ் இந்தியப் பிரிவின் தலைவர் தீபிகா பான் (Deepika Bhan, President, Packaged Foods-India, Tata Consumer Products) கூறுகையில், “டாடா சால்ட் இந்தியாவில் பிராண்டட் உப்புகள் பிரிவில் முன்னோடியாக இருந்து வருகிறது. தூய்மை மற்றும் தரம் ஆகியவற்றுக்கான கோல்ட் ஸ்டாண்டர்ட் எனப்படும் முதன்மை தர நிலைகளுக்காக டாடா சால்ட் அதன் வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்பப்பட்டு வருவதோடு, பெரும் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. நுகர்வோர் ராக் சால்ட்டை (இந்து உப்பு) வாங்க விரும்பும் போது அவர்கள் நம்பகத்தன்மையைப் பெற்றதாகவும், சிறந்த தரத்துடனும் கூடிய ஒரு ப்ராண்டாக அது இருக்க வேண்டும். அதை நாங்கள் உறுதிசெய்யும் வகையில் எங்களது நிபுணத்துவத்துடனும், அனுபவத்துடனும் அத்தயாரிப்பை வழங்குகிறோம். மிக வேகமாக வளர்ச்சிக்கண்டு வரும் இந்து உப்பு பிரிவை தீர்மானிப்பதில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்’ என்றார்.

ஓகில்வி நிறுவனத்தின் தலைமை வணிகப் பிரிவு அதிகாரி அனுராக் அக்னிஹோத்ரி கூறுகையில், “டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட்-டின் புதிய விளம்பரப் பிரச்சாரம், நம் இல்லங்களில் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சிட்டிகை இந்து உப்பிலும் டாடா மீதான நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை பற்றி எடுத்துரைக்கிறது. டாடா என்ற பெயர் இந்தியாவின் இதயத்துடன் எதிரொலிக்கிறது. அதைப் போலவே இந்த விளம்பரப் பிரச்சாரத்திற்கு உயிரூட்ட, இந்திய மக்களின் இதயங்களுக்கு நெருக்கமானவும், அன்பிற்குரியவருமான பாலிவுட்வின் முன்னணி நட்சத்திரம் கஜோலுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டுள்ளோம்.” என்றார்.

டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் எனப்படும் இந்த இந்து உப்பு குறித்த புதிய டிஜிட்டல் விளம்பரப் பிரச்சாரப் படம் பல்வேறு டிஜிட்டல் தளங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பரப் படத்தின் மூலம், ப்ரீமியம் தரத்திலான இந்து உப்பை பயன்படுத்தி தங்களது உப்பு பயன்பாட்டின் தரத்தை உயர்த்த விரும்பும் நுகர்வோருக்குருக்கும், இந்து உப்பின் நன்மைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பெற்றுப் பயன் அடைய விரும்புவோருக்கும் டாடா சால்ட் ஹிமாலயன் ராக் சால்ட் மிகசரியான தேர்வாக இருக்கும் என்பதை அழகுடன் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *