நான் கெட்ட வார்த்தை பேசினேனா..? நிர்மலா சீதாராமனுக்கு உதயநிதி கேள்வி
“அப்பன்” என்று கூறுவது கெட்ட வார்த்தையா…?
சென்னை கோட்டூர்புரத்தில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சியை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி துவக்கிவைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி;
நான் அநாகரீகமாக என்ன பேசினேன், “அப்பன்” என்று கூறுவது கெட்ட வார்த்தையா…?
மத்திய நிதியமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்வது பேரிடரில் தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியளிக்க வேண்டும்.
தென்தமிழகத்தில் இன்னும் வெள்ளநீர் விடியவில்லை, அமைச்சர்களும் அதிகாரிகளும் களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
பிரதமரை சந்திகிக்கவும், இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவும் தான் முதல்வர் டெல்லி சென்றார். இந்தியா கூட்டணியில் பங்கேற்பதும் தான் முக்கியமான வேலை. தமிழகம் திரும்பியவுடன் தென்தமிழகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் என்று உதயநிதி பேசினார்.