உஜ்ஜீவன் SFB, வங்கிச் சேவையின் வசதியையும் எளிமையையும் வலியுறுத்தி, ‘பேங்கிங் ஜைஸே மேரி மர்ஸி, உஜ்ஜீவன் மேக்ஸ் இட் ஈஸி-ஈஸி’ எனும் அதன் புதிய பிராண்ட் பிரச்சாரத்தை வெளியிட்டது
சென்னை: இந்தியாவின் முன்னணி சிறு நிதி வங்கியான உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (உஜ்ஜீவன்), அதன் புதிய பிராண்ட் பிரச்சாரமான ‘பேங்கிங் ஜைஸே மேரி மர்ஸி, உஜ்ஜீவன் மேக்ஸ் இட் ஈஸி-ஈஸி (நீங்கள் விரும்பும் வழியில் வங்கி சேவையை பயன்படுத்துங்கள், உஜ்ஜீவன் அதை எளிதிலும் எளிதாக்குகிறது)’-ஐ வெளியிட்டது. இப்பிரச்சாரமானது, வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வசதிக்கேற்ப, பாதுகாப்பான மற்றும் தொந்தரவுகள் ஏதுமற்ற அனுபவத்துடன் வங்கிச் சேவைக்கான சுதந்திரத்தை வழங்குவதில் இந்த வங்கியின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இப்பிரச்சாரத்தின், ‘பேங்கிங் ஜைஸே மேரி மர்ஸி, உஜ்ஜீவன் மேக்ஸ் இட் ஈஸி-ஈஸி ,’எனும் கவர்ச்சியான ஜிங்கிள்-ஆனது, உஜ்ஜீவனுடன் வங்கிச் சேவை பெறுவதற்கான மிகவும் எளிதான மற்றும் வசதியான ஒரு வழியை விவரித்து, நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது. இத்திரைப்படம், உஜ்ஜீவன்-உடன் வங்கிச் சேவை செய்வது சிரமமற்றது மற்றும் சுவாரஸ்யமானது என்பதை, ஃபிஜிட்டல் தளம் முழுவதிலும் விளக்குகிறது. ஒரு பணிபுரிபவர் எதிர்பார்க்கும் எளிதான அணுகல், வசதி மற்றும் தனிப்பயனாக்கம் அல்லது மூத்தகுடிமக்கள் விரும்பும் பாரம்பரிய வங்கியில் எளிமை மற்றும் நம்பிக்கை ஆகிய எதுவாக இருப்பினும், உஜ்ஜீவன் தனது வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை அவர்களின் வசதிக்கேற்ப பூர்த்தி செய்கிறது,
இந்த 7 வார கால பிராண்டு பிரச்சாரமானது, செப்டம்பர் 02, 2024 அன்று, பதினொரு பிராந்திய மொழிகளில் தொடங்குகிறது. இது இணையம், OTT சேனல்கள் மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆதிக்கம் செலுத்துபவர்களின் ஆதரவு மற்றும் உஜ்ஜீவன் கிளைகள் ஆகிவற்றின் மூலம் கொண்டு செல்லப்படும்.
உஜ்ஜீவன் நிர்வாக இயக்குனர் திருமதி கரோல் ஃபர்டடோ, கூறியதாவது, “பொறுப்பான ஒரு வெகுஜன சந்தை வங்கி என்ற முறையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிதிசார் மற்றும் டிஜிட்டல் நுட்பத்தை உள்ளடக்கிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ளோம். எங்களின் இப்புதிய பிரச்சாரமானது, ஃபிஜிட்டல் சேனல்கள் முழுவதும், எப்போதும், எங்கிருந்தபடியும், ஒரு பாதுகாப்பான முறையில், வங்கிச் சேவையை எளிதாகவும், அணுகக்கூடியதாகவும் ஆக்குவதற்கான ஒரு உத்தரவாதமாகும். எங்கள் டிஜிட்டல் பேங்கிங் தயாரிப்புத் தொகுப்பானது, எங்களை எளிதான மற்றும் வசதியளிக்கும் ஒரு பேங்கிங் பார்ட்னராக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்றார்.
உஜ்ஜீவன்-இன் சீஃப் மார்கெட்டிங் ஆஃபிசர் திரு. லக்ஷ்மன் வேலாயுதம் கூறியதாவது, “வாடிக்கையாளர்கள், பேங்கிங் என்பது, அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் சலிப்பூட்டும் ஒன்றெனக் கருதுகின்றனர். உஜ்ஜீவனுடன் வங்கிச் சேவை பெறுவது இப்போது எளிதிலும் எளிதானது என்பதை எங்கள் இப்புதிய பிரச்சாரம் வலியுறுத்துகிறது. எங்கள் டிஜிட்டல் நேட்டிவ் வாடிக்கையாளர்கள் இந்த ஜிங்கிள் மற்றும் ஜிக்-ஐ ஊக்கப்படுத்தியுள்ளனர். இத்திரைப்படம் எவரையும் ஹம் செய்ய வைப்பதுடன், வங்கி சேவை பெறுவதற்கும் மற்றும் சிறந்த வாழ்க்கையை கட்டமைப்பதற்கும் எளிதான வழியைக் காண முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
இந்த பிரச்சாரமானது, பிளான் B அட்வர்டைசிங் மூலம் கருத்தாக்கம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது. இந்த பிரச்சாரம் பற்றி பேசிய திரு. சுனில் பெனுகொண்டா, தலைமை நிர்வாக அதிகாரி, பிளான் B அட்வர்டைசிங், பெங்களூரு, கூறியதாவது, “எங்கும் வங்கிகள் உள்ளன. எங்கும் வங்கிகள் உள்ளன. ஆனால், உஜ்ஜீவன் போன்ற வங்கியை நீங்கள் அரிதாகவே காண்பீர்கள். இது வாடிக்கையாளரை மையமாகக் கொண்டிருப்பதில் ஆழ்ந்த உறுதியுடன் இருக்கும் ஒரு வங்கியாகும். வாடிக்கையாளர் சேவை என்பது ஒரு அம்சம் என்பதை விட, அதை கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும் ஒரு வங்கியை நாங்கள் காண்பது இதுவே முதல் முறையாகும். எளிமை மற்றும் வசதி ஆகியவற்றை மிகத் துல்லியமாக காட்டுவதற்கு இப்பிரச்சாரப் படம் முயற்சிக்கிறது. எளிதான வங்கிச் சேவைக்கான இந்த கருத்தாக்கமானது மக்களின் மனதில் குடியேறும் என்று நாங்கள் நம்புகிறோம் மற்றும் எளிமையான, நேரடியான மற்றும் மறக்கமுடியாத ஜிங்கிளுக்கு எங்களது நன்றி.” என்றார்.
இப்பிரச்சாரத்தைப் பற்றிக் கூறுகையில், பிளான் B, கிரியேட்டிவ் டைரக்டர் திரு. கார்த்திக் வெங்கட்ராமன் கூறியதாவது, “இத்தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் அபரிமிதமான நன்மைகளைக் கொண்டு செல்வதற்காக , நாங்கள், ஒரு மகிழ்ச்சியான, ஹம் செய்யவல்ல ஜிங்கிள் மூலம் அவற்றை வழங்கத் தேர்ந்தெடுத்தோம். நாங்கள் அதை சில வேடிக்கையான, நவீன ஹூக் ஸ்டெப்-களுடன் இணைத்து, எளிதான மற்றும் தனித்துவமான முறையில் நடனத்தை அமைத்தோம்! அனைவரும் ஒன்றாக, எங்களின் வழிகாட்டலின்படி மறக்கமுடியாத வகையில் அதற்கு உயிரூட்டி இருக்கிறார்கள்.” என்றார்.