புளுசட்டை மாறனை அறிவுஜீவி என்று விமர்சித்த விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரோமியோ படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து ரோமியோ திரைப்படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;
பல நல்ல படங்களை விமர்சித்து கொல்லும் திரு.புளு சட்டை மாறன் போன்ற சிலருக்கும், இவங்க சொல்றதையெல்லாம் உண்மை என்று நம்பி, ரோமியோ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல், தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
என் அன்பு மக்களே, ரோமியோ ஒரு நல்ல படம், போய் பாருங்கள் புரியும்
ரோமியோவ அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.