அனைவரும் வாக்களிக்குமாறு த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் தனது வீட்டின் அருகே உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை பதிவு செய்தார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்.
ரசிகர்களின் கூட்டத்திற்கு இடையே வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார் நடிகர் விஜய்.
அதன்பின்னர் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
நான் ஜனாயநாயக கடமையை ஆற்றியுள்ளேன். நீங்களும் உங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் ஜனாயநாயக கடமையை நிறைவேற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
