General

வில்லேஜ் டிக்கெட் 2023: மாபெரும் கிராமத் திருவிழா மே-5 முதல் சென்னையில்

தமிழக கிராமங்களின் கலாச்சாரம், உணவு, பாரம்பரியங்களை நகர்ப்புற மக்கள் அறிந்துகொள்ளும் விதமாக பிராண்ட் அவதார் சார்பாக வில்லேஜ் டிக்கட் என்னும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி, நான்காவது ஆண்டாக இந்தாண்டு சக்தி மசாலா நிறுவனத்தின் பங்களிப்புடன் சக்தி மசாலா’ஸ் வில்லேஜ் டிக்கெட் என்ற பெயரில் சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. 

வருகின்ற மே 5 ஆம் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கிராமப்புற வாழ்க்கையில் சுவாரஸ்யமான விஷயங்களுக்கு பஞ்சமேயில்லை. 

தமிழ்நாட்டின் கிராமங்களில் காலம் காலமாக பராமரிக்கப்பட்டு வரும் ஆரோக்கியமான உணவு கலாச்சாரம், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக விளையாடப்பட்ட, தமிழ் மண்ணுக்கே உரிய விளையாட்டுகள், பழங்கால கிராமப்புற வீடுகள், பொட்டி – கடை, பஞ்சாயத்து அமைப்பு முறை, மைய மேடை மற்றும் வியப்பூட்டும் அற்புதமான பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் கிராமப்புற வாழ்க்கையோடு இணைந்திருக்கும் நிலையில் அவற்றையெல்லாம் நகர்ப்புற மக்களுக்கு நினைவூட்டி, அறிமுகப்படுத்தி அதற்கு புத்துயிர் அளிப்பதே வில்லேஜ் டிக்கெட் நிகழ்வின் நோக்கமாகும்.

பிராண்டு அவதார் – ன் தலைமை செயல் அலுவலர் திரு. ஹேமச்சந்திரன் இது பற்றி கூறியதாவது:

வில்லேஜ் டிக்கெட் நிகழ்வு இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்டபோது கிடைத்த அற்புதமான வரவேற்பு எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

கடந்த ஆண்டுகளில் சுமார் 60,000-க்கும் அதிகமானோர் இதனை கண்டுகளித்துள்ளனர்.

முந்தைய பதிப்புகளைவிட இன்னும் சிறப்பான பொழுதுபோக்கு அம்சங்களையும், ரசித்து மகிழ்வதற்கான பல்வேறு விருப்பத்தேர்வுகளையும் மிகப்பெரிய அளவில் உள்ளடக்கியதாக இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருக்கிறோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கலை அரங்கம் – நாட்டுப்புற நடனம், நாட்டுப்புற பாடல், ஃப்ரீஸ்டைல் நடனம், மிமிக்ரி (பலகுரல்) நிகழ்ச்சி மற்றும் கலாச்சார பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகளில் பல்வேறு கல்லூரி மாணவ மாணவியர் பங்கேற்கும் கலாச்சார போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமான உணவுகளை நேரடியாக சமைத்து வழங்கும் 33 உணவகங்கள் இடம்பெறுகின்றன.

துவக்க நாளன்று “மகிழ்ச்சியான வாழ்வு திருமணத்திற்கு முன்பா அல்லது பின்பா” என்ற தலைப்பில், ராஜ்மோகன் மற்றும்  குழுவினர் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தலை வாழை இலை முழுக்க 32 வகையான அசைவ உணவு, அதே மாதிரி கல்யாண விருந்துல 32 வகையான சைவ உணவு, கிராமத்து விருந்துல 48 வகையான உணவு பஃபே முறையில மதிய விருந்தாக பரிமாறப்படும்.

20க்கும் மேலான பாரம்பரிய கலைஞர்களுடைய கலை நிகழ்ச்சிகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம், கரகாட்டம், அது மட்டும் இல்லாம நம்ம குழந்தைகளுக்கு தெரியாம போய்ட்டு இருக்கிற கில்லி, பம்பரம், உரியடி, கபடி எல்லாமும் கூட அங்க இருக்க போகுது.

நுழைவு அனுமதிச்சீட்டு:
1. நுழைவுச்சீட்டின் விலை ரூ.200+ ஜிஎஸ்டி வரி மற்றும் பணம் செலுத்துவதற்கான கேட்வே கட்டணம்
2. 8 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு நுழைவுக்கட்டணம் இல்லை.

உங்களது நுழைவுச் சீட்டுகளை இதில் முன்பதிவு செய்து பெறலாம்: https://buyticket.villageticket.com/ticketBookings/OneDayEntryPass

நிகழ்ச்சி நடைபெறும் நேரங்கள்
1. கலை அரங்கம் – காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை
2. உணவு – காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை
3. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் மற்றும் வேறுபிற அனுபவங்கள் மற்றும் செயல் நடவடிக்கைகள் காலை 11:00 முதல், இரவு 9:00 மணி வரை

அதிக தகவலுக்கு, காணவும்: https://villageticket.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *