போதை இல்லா தமிழகத்தை உருவாக்க மெகா விழிப்புணர்வு மராத்தான்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட தடகள சங்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அளவிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதனை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, தமிழ்நாடு தடகள சங்கத்தின் மாநில செயலாளர் லதா, விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
இதில் சென்னை, விழுப்புரம், கடலூர், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
16, 18, மற்றும் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவுகளிலும் மற்றும் 5, 10 கிலோ மீட்டர் என 8 பிரிவுகளாக மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஆறு இடங்களை பிடித்த வீரர்களுக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் எம்.பி. கவுதமசிகாமணி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் விழுப்புரம் மாவட்ட தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.