ஓட்டு போடுறதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க; வரிசையில் நிற்க வேண்டாம்
சென்னை, ஏப்ரல் 17:
மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்தில் நாளை மறுநாள் ஏப்ரல் 19-ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும் வாக்காளர் ஒருவரின் வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை போன்ற இந்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது பெயருடன் ஒப்பீடு செய்து வாக்காளருக்கு துண்டு சீட்டில் பகுதி வரிசை எண் எழுதி தரப்படும்.
பகுதி வரிசை எண்ணை கொண்டு குறிப்பிட்ட வாக்காளரின் வருகையை வாக்குச்சாவடியில் இருக்கும் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்டுகள் குறிப்பெடுத்துக்கொள்வர்.
அவ்வாறு பகுதி வரிசை எண்ணை வாக்காளர் பட்டியலில் கண்டறிய சிறுது நேரம் எதுத்துக்கொள்ளலாம், சில சமயங்களில் முகவரி மாற்றம், வாக்குசாவடி மறுசீரமைப்பு போன்ற காரணங்களினால் பகுதி வரிசை எண்ணை கண்டறிவதில் தாமதம் ஏற்படலாம்.
வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்னர் https://electoralsearch.eci.gov.in/ என்கிற இணையதளத்தில் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண் அல்லது மொபைல் நம்பர் அல்லது தங்களது விவரங்களை உள்ளீடு செய்து தங்களது பகுதி வரிசை எண்ணை தெரிந்துகொள்ளலாம்.
பகுதி வரிசை எண்ணை தங்களது வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரிகளிடம் தெரிவித்தால், கால தாமதம் இல்லாமல் தங்களது வாக்குகளை பதிவு செய்யலாம்.