General

WAYCOOL நிறுவனத்தின் உணவு பொருட்கள் விற்பனைக்காக BrandsNext என்னும் துணை நிறுவனம் துவக்கம்

சென்னை, ஏப்.21,2023 – இந்தியாவில் முன்னணி உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப நிறுவனமாக திகழும் வேகூல் (WayCool), நுகர்வோருக்கான உணவு பொருட்கள் விற்பனைக்காக பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் (BrandsNext) என்னும் பெயரில் புதிய கிளை நிறுவனத்தை துவக்கியுளளது.

புதிதாக துவக்கப்பட்டுள்ள இந்நிறுவனத்திற்கு தலைமை செயல் அதிகாரியாக ரவீந்திரன் என்பவரை வேகூல் நிறுவனம் நியமித்துள்ளது.

இதுதொடர்பாக வேகூல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கார்த்திக் ஜெயராமன், பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் தலைமை செயல் அதிகாரி ரவீந்திரன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது கூறுகையில்,

“மண்ணில் இருந்து விற்பனைக்கு” என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு வேகூல் நிறுவனம் கடந்த 2015 ஆண்டு துவங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018–ம் ஆண்டு மதுரம் (Madhuram) என்ற பெயரில் பேக்கிங் செய்யப்பட்ட தரமான உணவுப் பொருட்கள் மற்றும் அரிசி விற்பனை துறையில் நுழைந்தது.

பின்னர், அன்றாட சமையலுக்கு தேவையான பருப்பு வகைகள், மசாலா பொருட்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, சர்க்கரை, வெல்லம், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை விற்பனை செய்ய கிச்சன்ஜி (KitchenJi) என்னும் பெயரில் பிரீமியம் பிராண்டை அறிமுகம் செய்தது.

இதேபோல் ஃபிரெஷீ’ஸ் (Freshey’s) என்ற பெயரில் இட்லி, தோசை மாவு, நெய், பனீர், உள்ளிட்ட உடனடியாக சமைக்கும் வகையிலான பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் தென்னிந்திய மக்களின் சாப்பாட்டை மேலும் சுவையாக மாற்றும் விதமாக ‘பிராண்ட்ஸ்நெக்ஸ்ட்’ என்ற பெயரில் புதிய பயணத்தை வேகூல் துவங்கி உள்ளது.

ஏற்கனவே வேகூல் நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த உணவு பொருட்கள் அனைத்தும் இனி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் நிறுவனத்தின் கீழ் இயக்கப்படும்.

இதன்மூலம் டீலர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்களுடனான உறவை மேம்படுத்தி அதன்மூலம் வியாபாரத்தை பெருக்கி 2024 ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயை இரடிப்பாக்க திட்டமிட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *