யமஹா மியூசிக் ஸ்கொயர்; மியூசி மியூசிக்கல் நிறுவனத்தின் பிரத்யேக விற்பனை நிலையம்
சென்னை: ஆட்டோமொபைல் மற்றும் மியூசிக் / ஆடியோ துறையில் பெருநிறுவனமாக உலகின் முன்னணி பிராண்டுகளுள் ஒன்றாகப் புகழ்பெற்று விளங்கும் யமஹா, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அதன் 2வது பிரத்யேக ப்ரீமியம் ஷோரூமைத் தொடங்கியிருக்கிறது.
இசைக் கலைஞர்களுக்கு ஸ்டுடியோ வசதிகளையும், சாதனங்களையும் கிடைக்குமாறு செய்ய வேண்டுமென்ற நோக்கத்திற்காக யமஹா இவ்விற்பனை நிலையத்தை சென்னையில் கொண்டு வந்துள்ளது. மிகவும் புகழ்பெற்ற இசை பயிற்சியாளர்கள் குழுவின் வழிகாட்டலின் கீழ், மிகச்சிறந்த தரத்தில் இசைப்பயிற்சியை இந்நாட்டின் இளைஞர்களுக்கு வழங்குவதன் மூலம் அவர்களை திறன்மிக்கவர்களாக ஆக்குவதில் யமஹா கொண்டிருக்கும் அர்ப்பணிப்பையும் இந்த முன்னெடுப்பு திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியாவெங்கும் மொத்தமாக 26 ஸ்டோர்கள் என மிகப்பெரிய வலையமைப்பாக யமஹா மியூசிக் ஸ்டோர் ஏற்கனவே விரிவடைந்திருக்கிறது; தமிழகத்தில் சென்னையில் இரண்டாவது விற்பனை நிலையம் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், மொத்த எண்ணிக்கை 27-ஆக உயர்த்தியிருக்கிறது.
இதே போல் தேவையான இடங்களில் விற்பனை நிலையங்களை இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இசை ஆர்வலர்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இசைக் கருவிகளின் நேரடியான செய்முறை விளக்கங்களை பெறமுடியும்.
கடந்த 183 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் வரலாற்று சிறப்பு மிக்க மியூசிக் ஸ்டோரான மியூசி மியூசிக்கல் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை யமஹா செய்து கொண்டிருக்கிறது. இந்த மியூசிக் ஸ்டோரை மியூசி மியூசிக்கல் நிர்வகிப்பது மற்றும் இப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்குவது இந்த உடன்பாட்டு அம்சங்களுள் உள்ளடங்கும்.
இசைக்கருவிகள் மற்றும் அவைகள் மீதான பயிற்சியில் வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் தனது செழுமையான நிபுணத்துவத்தை மியூசி மியூசிக்கல் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும். தற்போது மேற்கொள்ளப்படும் ஒரு புதிய பிசினஸ் மாடலாகத் திகழும் இது, சென்னையிலுள்ள அறிவார்ந்த வாடிக்கையாளர்களுக்கு இரு நிறுவனங்களின் மிகச்சிறந்த நிபுணத்துவத்தையும், சேவையையும் இது வழங்கும்.
இசையில் திறமையாளர்களை அடையாளம் காணவும், ஊக்குவிக்கவும் உதவுவதற்கு இந்த முன்னெடுப்பு திட்டத்தை விரிவாக்க யமஹா உறுதி கொண்டிருக்கிறது. இசைத்துறையை முன்னேற்றம் காணச் செய்யவும் மற்றும் பொதுமக்களின் தேவைகளை திறம்பட பூர்த்தி செய்யவும், அதிக அளவு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், செயல்திட்டங்களை மேற்கொள்ளவும் யமஹா சிறப்பு கவனம் செலுத்தும்.
யமஹா நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் ரெஹான் சித்திகி இது குறித்து கூறியதாவது: “இந்தியாவில் இளைய தலைமுறையினரின் திறமைகளை மேலும் தரம் உயர்த்துவதே இந்த முன்னேற்ற நடவடிக்கையின் நோக்கமாகும்; அத்துடன் இப்பிராந்தியத்தில் சிறந்த தரத்தில் இசைக்கருவிகளை வழங்குவதும் எமது குறிக்கோளாகும். தொழில்நுட்பம் மற்றும் தரம் ஆகியவற்றில் உயர்நேர்த்தி நிலை என்ற இலக்கை அடைவதில் யமஹாவில் பணியாற்றும் நாங்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். இசை மாணவர்களுக்கு அவர்களது திறன்களை மேம்படுத்தவும் மற்றும் ஆடியோ உலகில், உலகத்தரமான பயிற்சிக்கான அணுகுவசதியைப் பெறவும் ஒரு சிறப்பான தளத்தினை இந்த முன்னெடுப்பு நடவடிக்கை வழங்கும்.”
முதல் 30 நாட்களுக்கு யமஹா மியூசிக் ஸ்கொயரில் பயிற்சி மற்றும் தயாரிப்புகள் மீதான பயிலரங்கு, மியூசி மியூசிக்கல் நிறுவனத்தால் நடத்தப்படும்.