General

குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட பள்ளிக்கூட மேஜைகள்

சென்னை மந்தைவெளியில் உள்ள ராணிமெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐ.டி.சி நிறுவனம் சார்பில் yippee better world என்னும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழக மாவட்ட வருவாய் அலுவலர் விஜயலட்சுமி, கிண்டியில் உள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் அமுதா சந்தானம், ஐ.டி.சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து அறிவியல் பிரிவு தலைவர் பாவனா சர்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பு விருந்தினர்களை நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

இயற்கையை பாதுகாப்பது, பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், மனித பரிணாம வளர்ச்சி குறித்தும் மாணவிகளை உற்சாகப்படுத்தும் விதமாக சிறப்பு விருந்தினர்கள் மேடையில் பேசினர்.

தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்பட்ட நூறு மேஜைகளை way for life மற்றும் விதை ஆகிய தொண்டு நிறுவனங்கள் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கின.

கடந்த ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் துவங்கிய இந்நிகழ்ச்சி, இந்தாண்டு சென்னையில் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் சென்னையில் உள்ள அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பள்ளிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் தங்களிடம் சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகளை இடுவர்.

அவ்வாறு இந்தாண்டு சுமார் இரண்டரை லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளி மற்றும் மற்ற இடங்களில் சேகரமாகும் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டு சுமார் 1200 மேஜைகள் செய்யப்படவுள்ளதாகவும், அவற்றை தேவையுள்ள அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *