சூப்பர் ஸ்டார் அகாடமியின் பட்டமளிப்பு விழா
சென்னை: திவ்யா கல்வி அறக்கட்டளையின் ஆசிரியர் பயிற்சி பள்ளியான சூப்பர் ஸ்டார் அகாடமியின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிந்தி மாதிரி மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் விக்டோரியா, நல்லி குப்புசாமி விவேகானந்தா பள்ளியின் முதல்வர் தேவிகா, கல்யாண மாலை பட்டிமன்ற புகழ் செந்தில் உமயரசி, விவசாயி கவுண்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவின் துவக்க நிகழ்வாக குத்துவிளக்கேற்றி கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஆசிரியர்களின் பயிற்சிக்கான செய்முறைகள் நடைபெற்றது. இந்த ஆண்டு சுமார் 200 மாணவர்கள் பயிற்சி பெற்று ஆசிரியர்களாக பட்டம் பெற்றனர்.
பயிற்சி காலத்தில் அவர்களின் திறன் அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன. தற்போது பட்டம் பெற்றுள்ள ஆசிரியர்கள் சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.