காஸ்ட்ரோல் புதிய எட்ஜ் வித தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது
· SUV-கள், ஹைப்ரிட்கள் மற்றும் ஐரோப்பிய வாகனங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட லூப்ரிகண்டுகளை அறிமுகப்படுத்துகிறது
· எட்ஜ் வித தயாரிப்புகள் காஸ்ட்ரோல் வொர்க்ஷாப்கள், ஆன்லைன் மற்றும் இந்தியா முழுவதிலும் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்
· ஷாருக்கான் இடம்பெறும் TVC ‘ஸ்டே அஹெட்’ விளம்பரம் இப்போது நேரலையில் உள்ளது (யூடியூப் இணைப்பு இதோ)
· காஸ்ட்ரோல் டிஸ்னி ஸ்டாரின் டி20 உலகக் கோப்பை மற்றும் விம்பிள்டன் ஒளிபரப்புக்கான அசோசியேட் ஸ்பான்சர் ஆகும்.
சென்னை: காஸ்ட்ரோல் இந்தியா லிமிடெட் இன்று காஸ்ட்ரோல் எட்ஜ் வரிசையில் அற்புதமான தயாரிப்பு வகைகளை வெளியிட்டுள்ளது. இந்த பிரீமியம் மற்றும் மேம்பட்ட இன்ஜின் ஆயில், தேவைக்கேற்ற செயல்திறனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது, இப்போது பயணிகளின் கார் பிரிவுக்கு ஏற்றவாறு மூன்று புதிய வகைகளையும் கொண்டுள்ளது, இது வாகன ஓட்டிகளின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்கிறது.
இந்த வெளியீட்டை ஆதரிக்கும் வகையில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் மற்றும் பிராண்ட் அம்பாசிடரான ஷாருக்கான் இடம்பெறும் ஸ்டே அஹெட் என்கிற டைனமிக்கான தொலைக்காட்சி விளம்பரம்(TVC) வெளியாகியுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 போட்டியின் மத்தியில் ஜூன் 9, 2024 அன்று TVC தனது பிரமாண்டமான பிரீமியரை வெளியிட முடிவு செய்துள்ளது, இதில் காஸ்ட்ரோல் எட்ஜ் வழங்கப் போகும் சிறப்பான செயல்திறனை எடுத்துக்காட்டும் விதமாக கான் புதிய மற்றும் அற்புதமான அவதாரத்தில் காட்டப்பட்டுள்ளார்.
இந்த விளம்பரமானது இன்றைய பாப்பராசி கலாச்சாரத்தை புத்திசாலித்தனமாக கையாண்டுள்ளது, பிரபலங்கள் புகைப்படம் எடுப்பவர்களிடம் இருந்து ‘ஸ்டே அஹேட்’ ஆக இருக்க புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பதை சித்தரிக்கிறது. TVCயில் சிறப்பிக்கப்பட்டுள்ள முக்கிய செய்தி என்னவென்றால், தேவைக்கேற்ப இயந்திர செயல்திறனை கணிசமாக உயர்த்தும் காஸ்ட்ரோல் எட்ஜின் திறன், எல்லா சூழ்நிலையிலும், எல்லா நிலப்பரப்பிலும் ஓட்டுநர்கள் இதன் விதிவிலக்கான செயல்திறனை நம்பலாம் என்பதை உறுதிசெய்கிறது.
இந்த TVC ஷாருக் கான் தன் கையில் காஸ்ட்ரோல் எட்ஜ் பேக்கைப் பிடித்துக் கொண்டு, நிறுத்தப்பட்டிருக்கும் காருக்கு வெளியே தனது கொஞ்சலான நடன அசைவுகளை செய்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது, வேகமாக துரத்தி வந்ததால் சோர்வடைந்த பாப்பராசிகள் தங்கள் பைக்குகளை விட்டு ஷாருக்கானை அணுகி, இறுதியாக அவரை கண்டதில் தங்களது ஆச்சரியத்தை வெளிப்படுத்துகின்றனர். ஃபிரேம் ஒரு ஃப்ளாஷ்பேக்கிற்கு செல்கிறது, ஒரு உற்சாகமான மற்றும் விளையாட்டுத்தனமான துரத்தலைக் காட்டுகிறது, அங்கு பாப்பராசிகள் ஆர்வத்துடன் படங்களுக்காக SRK-ன் காரை நெருங்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும், ஒவ்வொரு முறையும், SRK வேகமாக மறைந்து விடுவதால், பாப்பராசிக்கு அவரது மங்கலான படங்கள் மட்டுமே கிடைக்கின்றன.
SRK போன்ற பிரபலங்கள் பாப்பராசியை தவிர்க்க புதுமையான வழிமுறைகளை கையாளலாம் என்பதை நகைச்சுவையுடன் விளம்பரம் எடுத்துக்காட்டுகிறது. எளிமையான முறையில் SRK, பாப்பராசிகளிடம் ‘ஸ்டேயிங் அஹெட்’ இருக்க தனது ரகசியத்தை வெளிப்படுத்தி, அவர்களிடம் காஸ்ட்ரோல் எட்ஜ் இன்ஜின் ஆயிலை வழங்குகிறார். பாப்பராசிகள், இறுதியாக ஒரு தெளிவான புகைப்படத்தை எடுக்க முடியும் என்கிறு நம்பிக்கையில், தங்கள் கேமராக்களை தயார் செய்கிறார்கள். இருப்பினும், SRK வேகத்தை மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது அவர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றமாக மாறுகிறது. “காஸ்ட்ரோல் எட்ஜ், ஸ்டே அஹெட்” என்று அனைவரையும் பின்னுக்கு தள்ளி SRK பயணம் செய்வதோடு விளம்பரம் முடிகிறது.
“ஷாருக்கான் இடம்பெறும் ஈர்க்ககூடிய இந்த மல்டிமீடியா விளம்பரத்துடன், எங்களின் உயர் செயல்திறன் கொண்ட கார் லூப்ரிகண்டு வகையான காஸ்ட்ரோல் எட்ஜை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த விளம்பரம் SRK-ஐ பயன்படுத்தி, அவரது வாழ்க்கையின் உண்மையான ஒரு பகுதியைக் காட்டுகிறது, அவருக்கு உண்மையிலேயே ஒரு நன்மையை இது வழங்கவல்லது” என்று காஸ்ட்ரோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் சந்தைப்படுத்தல் தலைவருமான திரு. ரோஹித் தல்வார் கூறினார். “காஸ்ட்ரோல் எட்ஜ் அறிமுகம் மூலம், புதுமைகளில் கவனம் செலுத்துவதோடு, இந்தியாவின் வளர்ந்து வரும் தேவையான கார்களின் சிறந்த செயல்திறனை பூர்த்தி செய்கிறது. புதிய காஸ்ட்ரோல் எட்ஜ் வகையில், ஹைப்ரிட்கள் முதல் ஐரோப்பிய கார்கள் மற்றும் SUVகள் வரையிலான பல்வேறு வகையான வாகனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட தயாரிப்புகள், உயர் தொழில் தரநிலைக்கான தேவைகளை கடந்த அதிநவீன தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இந்த அறிமுகமானது லூப்ரிகண்ட் துறையில் எங்களின் தலைமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மேலும் காஸ்ட்ரோல் எட்ஜ் இன்ஜின் செயல்திறனில் புதிய அளவுகோலை அமைத்து வணிக வளர்ச்சியை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மேலும் கூறினார்.
TVCயின் உருவாக்கம் பற்றிப் பேசிய சுகேஷ் நாயக், CCO Ogilvy India, “நாங்கள் காஸ்ட்ரோலில் ஏதாவது மாயாஜாலம் காட்ட வேண்டியிருந்தது. SRK உடன், அவரது திறனை ஆக்கப்பூர்வமாக அதிகரிக்க விரும்பினோம். பிறகு “SRK-க்கு ஏன் அதிக செயல்திறன் தேவைப்படும்?” என்கிற கெள்வியை எங்களை நாங்களே கேட்டதன் மூலமாக ‘ஸ்டே அஹேட்’ சிந்தனை பிறந்தது. இது வெறும் TVC அல்ல, இது ஒரு முழுமையான வேடிக்கை கலந்த டீஸர், SRK இன் படத்தொகுப்பு, ரோலர் கோஸ்டர் சேஸ்கள் மற்றும் கிண்டல் கலந்த நகைச்சுவை நிரம்பிய முழுமையான பிரச்சாரமாகும், இது நுகர்வோரை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும்”
“காஸ்ட்ரோல் மற்றும் SRK ஆகிய இரண்டு பிரபலமான பிராண்டுகள் இணைவது என்பது, பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு வகையான மக்களையும் கவர்ந்திழுக்கக்கூடிய ஒன்று. இந்த பிளாக்பஸ்டர் பிரச்சாரத்திற்கு பங்களித்ததில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று மைண்ட்ஷேர் தெற்காசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமின் லக்கானி கூறினார்.
இந்த பிரச்சாரம் பாப்பராசிக்கு SRK இன் முதல் தனிப்பயன் புகைப்பட கேலரியை வழங்குகிறது. SRK தனது காரில் காஸ்ட்ரோல் எட்ஜ் பயன்படுத்துவதன் மூலம் பாப்பராசியை விட முன்னால் இருப்பதால், பாப்பராசிகள் இப்போது இந்தப் படங்களை இலவசமாக அணுகலாம் மற்றும் பயன்படுத்தலாம் (ஹைப்பர்லிங்க் இங்கே).
புதிய காஸ்ட்ரோல் எட்ஜ் குறைந்தது 30%1 மேம்பட்ட செயல்திறன் மற்றும் கடினமான தொழில் வரம்புகளை சந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய OEM குறிப்பீடுகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட மற்றும் சோதிக்கப்பட்ட, பவர்பூஸ்ட் டெக்னாலஜிTM ஓட்டுநர்களுக்கு அதிக சக்தி மற்றும் தேவைப்படும் போது முழு அஸ்லரேஷனுக்கான திறனை அவர்களுக்கு அளிக்கிறது.
ஆடி, BMW, மெர்சிடஸ், ஜாகுவார், லேண்ட் ரோவர், வோல்க்ஸ்வேகன், ஸ்கோடா மற்றும் போர்ஷ் போன்ற ஹைப்ரிடு இன்ஜினுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எட்ஜ் ஹைப்ரிட் என்பது முன்னணி யூரோ OEMS கொண்ட எட்ஜ் யூரோ கார்களுக்கும் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பிரீமியம் SUVகளுக்காக எட்ஜ் SUV ஆகியவையும் இந்த அறிமுகத்தில் அடங்கும்.
டி20 உலகக் கோப்பை மட்டுமல்லாமல், டிஸ்னி ஸ்டாரின் ஜூலை 2024 ஒளிப்பரப்பாகும் விம்பிள்டனுக்கான அசோசியேட் ஸ்பான்சராகவும் காஸ்ட்ரோல் உள்ளது. டீஸர் வீடியோ, அச்சு, டிஜிட்டல், இன்ஃப்ளூயன்சர் பெருக்கம் மற்றும் OOH உட்பட பல தளங்களில் TVC ஜூன் 9 அன்று வெளியிடப்பட உள்ளது. 360 டிகிரி மார்க்கெட்டிங் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பல்வேறு பார்வையாளர்களை கவர ஏழு மொழிகளில் TVC மொழி மாற்றப்பட்டுள்ளது.