மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் சென்னை வேளச்சேரியில் புதிய ஷோரூம் திறப்பு
சென்னை, 13 ஜூலை 2024: தங்க நகை விற்பனையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் மலபார் கோல்ட் & டைமண்ட்ஸ் தமிழகத்தில் தனது 29 ஆவது கிளையை சென்னை வேளச்சேரியில் துவங்கியுள்ளது.
இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் தமிழ்நாடு மண்டல தலைவர் யாசர், தமிழ்நாடு மண்டல வணிக தலைவர் சபீர் அலி, தமிழ்நாடு வடக்கு மண்டல தலைவர் அமீர் பாபு, சென்னை வேளச்சேரி கிளை தலைவர் கார்ட்வின் ஜோசப் மற்றும் அந்நிறுவனத்தின் மேலாண்மை உறுப்பினர்கள், ஊழியர்கள் பலர் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தற்போது 13 நாடுகளில் 350 – க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி, கும்பகோணம், திருப்பூர், காரைக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மார்த்தாண்டம், புதுச்சேரி, கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளை கொண்டுள்ளது.
இந்த ஷோரூமில் அதிகமான இடவசதி, புதிய மாடல்கள் மற்றும் டிசைன்களில் தங்கம், வைரம், மற்றும் வெள்ளி, நகைகளின் தொகுப்புகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க தங்க நகைகள் கிடைப்பது சிறப்பம்சமாகும்.
அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான ‘மைன்’பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள “அன்கட்” வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.