நாவலூரில் டிஆர்ஏ நிறுவனத்தின் “டிஆர்ஏ இனாரா” உலகத்தரம் வாய்ந்த சொகுசு வில்லாக்கள்
சென்னை: சென்னையின் ரியல் எஸ்டேட் துறையில் பெருமைமிகு நிறுவனமான டிஆர்ஏ, தனது முதல் சொகுசு வில்லா குடியிருப்பு திட்டமான ‘டிஆர்ஏ இனாரா’வை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வில்லாக்கள் திட்டத்தை டிஆர்ஏ நிறுவனம் 100 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்த நாவலூரில் கட்டுகிறது.
6 ஏக்கர் நிலப்பரப்பில் 50க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் 3, 4 மற்றும் 5 படுக்கை அறைகளுடன் 1952 சதுர அடி முதல் 3697 சதுர அடி வரை 118 வில்லாக்கள் இங்கு கட்டப்பட உள்ளன.
இதன் 3 படுக்கை அறை கொண்ட வில்லாக்களின் விலை ரூ.1.70 கோடியில் துவங்குகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான நாவலூரில் அமைந்துள்ள டிஆர்ஏ இனாரா, முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.
இது குறித்து டிஆர்ஏ நிர்வாக இயக்குனர் ரஞ்சித் ரத்தோட் கூறுகையில், எங்கள் நிறுவனம் நீண்ட காலமாக மக்களிடம் மிகுந்த நம்பிக்கை பெற்ற நிறுவனமாக இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் குறித்த நேரத்தில் நாங்கள் எங்கள் வீடுகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருவதாகும். அதேபோல் இனாராவில் வில்லாக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அந்த உறுதியை அளிப்பதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். பிரத்யேக நில உரிமையுடன் கூடிய சென்னையின் முதல் அதிநவீன சொகுசு வில்லா திட்டமாக எங்களின் இந்த திட்டம் இருக்கும். 100 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட உள்ள, எங்களின் ‘இனாரா’ ஆடம்பர வாழ்க்கைக்கான எடுத்துக்காட்டாக இருக்கும்.
இங்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் ஆடம்பரத்தையும் அதிநவீன வசதியையும் ஒருங்கிணைக்கும் வகையில் வில்லாக்கள் கட்டப்பட உள்ளன. இனாராவின் ஒவ்வொரு அம்சமும் ஈடு இணையற்ற வாழ்க்கை அனுபவத்தை இங்கு வீடு வாங்குபவர்களுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான நாவலூரில் அமைந்துள்ள இந்த திட்டம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டுள்ளது. இனாரா என்பது ஒரு வீடு மட்டுமல்ல; அது இங்கு வீடு வாங்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கான முதலீடாகும் என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அதிநவீன வசதிகளை டிஆர்ஏ வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. ஆடம்பரத்துடன் அதிநவீன வசதியையும் இது உறுதி செய்கிறது. இங்கு உடற்பயிற்சி மையம், உட்புற விளையாட்டு மையங்கள், நீச்சல் குளம், நீச்சல் குளத்தின் ஓரத்தில் ஓய்வறைகள், நீராவி அறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய நவீன, உலகத் தரம் வாய்ந்த கிளப்ஹவுஸ் ஒன்றும் கட்டப்பட உள்ளது. அத்துடன் அனைத்து வயதினருக்கும் ஏற்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது. வயதானவர்கள் அமர்ந்து பேசுவதற்கான பிரத்யேக இடங்கள், மூலிகை தோட்டம், நடை பயிற்சி பகுதி, பார்பிக்யூ லவுஞ்ச், சூரிய சக்தியால் இயக்கப்படும் தெருவிளக்குகள், சாலையோர மரங்கள், 24×7 பாதுகாப்பு வசதி மற்றும் மின்சார பேக்அப் வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ளது.
இதன் 3 படுக்கை அறை கொண்ட வில்லாக்களின் விலை ரூ.1.70 கோடி முதல் துவங்குகிறது. இந்த திட்டம் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.