வானிலை ஆய்வு மையத்தைவிட வெதர்மேன் ஜான் பிரதீப் துல்லியமாக கூறுகிறார்: அன்புமணி ராமதாஸ்
கோவையில் பா.ம.க சார்பில் சமூகநீதி காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கோவை மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த அன்புமணியிடம் வானிலை ஆய்வு மையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய அவர்,
உலகத்தில் மற்ற நாடுகளில் துல்லியமாக மழை பெய்யும் நேரத்தை கணிக்கின்றனர். நம் நாட்டில் குத்துமதிப்பாகவே கணிக்கப்படுகிறது.
வானிலை ஆய்வு மையத்தைவிட தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் துல்லியமாக குறிப்பிடுகிறார். நான் அவரை பின்பற்றுகிறேன். அவர் என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்திகிறார் என்று தெரியவில்லை.
வானிலை ஆய்வு மையத்தில் புதிய தொழில்நுட்ப கருவிகள் இருந்தாலும், தெளிவான வானிலை அறிக்கையை ஏன் கொடுக்க முடியவில்லை. நான் அவர்களை குறை கூறவில்லை.
தற்போதைய வெள்ள சேதங்களை கருத்தில் கொண்டு நான் பேசவில்லை. வருங்காலங்களில் இது போன்ற இயற்கை பேரிடர்கள் அதிகளவில் வரும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வானிலை ஆய்வு மையம் உள்ளது. அவர்கள் துல்லியமாக கணித்தால் மட்டுமே அரசும், மக்களும் தயாராக இருக்க முடியும்.
தமிழக அரசிற்கு ஏற்கனவே கெட்ட பெயர் வந்துவிட்டது. முதல்வர் இதில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.