பாடகர் அறிவு மற்றும் சஞ்சய் சுப்ரமணியன் பாடிய சென்னைக்காரன் பாடலை ஆக்கோ வெளியிட்டது
சென்னை, ஆகஸ்ட் 2024: சென்னை மாநகரின் 385-வது தினத்தை கொண்டாடும் விதமாக இந்தியாவின் முன்னணி D2C காப்பீடு நிறுவனமான ஆக்கோ, நகரின் மாறிவரும் தோற்றத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னைக்காரன் (பெருமைமிகு சென்னைவாசி) என்ற பெயரிலான ஒரு புதிய இசை காணொலி பாடலை வழங்குகிறது.
தமிழ் ராப் பாடகர் அறிவு, கர்நாடக பாடகர் சஞ்சய் சுப்ரமணியன் ஆகியோர் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளனர். சென்னையின் ஆழமான பாரம்பரியங்கள் மற்றும் தனித்துவமான கலாச்சாரத்தோடு இம்மாநகரின் நவீனத்துவத்தை அழகாக கலந்து சென்னையின் தனிப்பண்பியல்புகளை இந்த இரு இசைக்கலைஞர்களும் இப்பாடலில் வெளிப்படுத்தியுள்ளனர்.
காப்பீடு தொழில்துறையை புரட்சிகரமானதாக மாற்றும் ACKO-ன் அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் சென்னை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. பாரம்பரியத்துடன் முற்போக்கான முன்னேற்றத்தையும் இம்மாநகரம் தயக்கமின்றி கலந்து சங்கமிப்பதைப் போலவே வழக்கமான காப்பீடு நடைமுறைகளை சவாலுக்கு உட்படுத்தும் ACKO, புத்தாக்க செயல்பாட்டின் மீது தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது; அதே வேளையில் வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்டிருக்கும் தனது முக்கியமான கோட்பாடுகளை தவறாமல் இது கடைபிடிக்கிறது. உலகளாவிய மொழியான இசையைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த கூட்டிணைவு சக்தியை ACKO அடிக்கோடிட்டு காட்டுகிறது.
ACKO-ன் தலைமை சந்தையாக்கல் அதிகாரி ஆஷிஷ் மிஸ்ரா, சென்னை இசைப்பாடல் வெளியீடு குறித்து பேசுகையில், சென்னை எப்போதுமே ஒரு முக்கியமான சந்தையாக ACKO-க்கு இருந்து வந்திருக்கிறது. ஐந்து லட்சம் வாடிக்கையாளர்களிடமிருந்து நாங்கள் பெற்றிருக்கிற மகத்தான ஆதரவு இந்நகரத்தோடு நாங்கள் உருவாக்கியிருக்கிற வலுவான இணைப்பை நேர்த்தியாக பிரதிபலிக்கிறது. எமது செயல்நடவடிக்கைகள் வழியாக, குறிப்பாக கடந்த ஆண்டு சென்னையை தாக்கிய மிச்சாங் புயல் போன்ற சவாலான தருணங்களின்போது எங்களால் நேர்மறை உணர்வையும், நம்பிக்கையும் உருவாக்க முடிந்தது. எமது மிக விரைவான பதில்வினையும், உரிமைக்கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கும் திறன்மிக்க செயல்முறையும் மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் நன்னம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. சென்னை காரன் என்ற இசைப்பாடல் வழியாக உலகப்பொது மொழியான ஆனால், இம்மாநகரில் வேர்களைக் கொண்டிருக்கிற இசையின் வழியாக சென்னையின் தனித்துவமான ஆன்மாவையும், உயிரோட்டமான உணர்வையும் நாங்கள் கொண்டாடுகிறோம். இந்த மாநகரைச் சேர்ந்த எந்தவொரு நபரும் இந்நகருக்கான இப்பாடலுடன் தங்களை இணைத்து ஒன்றுபடுத்தி ரசிப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று கூறினார்.