போதை பொருள் கடத்தல்காரன் பெயரை குழந்தைக்கு வைத்த உதயநிதி; அண்ணாமலை கடும் விமர்சனம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில்,
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்து நான் ஒருபோதும் பத்திரிகை நண்பர்களை பேட்டிக்காக அழைத்ததில்லை, என்னுடைய கருத்து வேண்டும் என்பதற்காக நீங்கள் என்னிடம் வருகிறீர்கள் என கூறினார்.
திராட்சை பழத்திற்கு ஏங்கும் நரியின் கதையை மேற்கோள்காட்டி ஈ.பி.எஸ்.-ஐ விமர்சனம் செய்தார்.
பிரதமரின் ரோடு ஷோ-வை விமர்சனம் செய்பவர்கள், பணம் கொடுத்து மக்களை வரவழைத்து கூட்டம் கூட்டாமல், பிரதமர் போன்று ரோடு ஷோ சென்றால் தான் அவர்களுக்காக தானாக கூடும் கூட்டம் என்ன என்று தெரியவரும். திமுக, அதிமுக போன்ற பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டும் கட்சிகளுக்கு பிரதமரின் ரோடு ஷோ குறித்து விமர்சனம் செய்யும் தகுதியில்லை.
பாஜக-வில் இருப்பவர்கள் அனைவரும் சமூக விரோதிகள் என்ற டி.ஆர்.பி ராஜாவின் விமர்சனத்திற்கு பதிலளித்த அண்ணாமலை, டி.ஆர்.பி ராஜாவின் அப்பா டி.ஆர்.பாலு சாராயம் காய்ச்சுபவர்.
சாராய ஆலை நடத்தி வரும் விரோதியின் மகனாக இருந்துகொண்டு அவர் இதை கூறுவது காமெடியாக உள்ளது என்று கூறினார்.
2024-க்கு பிறகு கோபாலபுர ஊழல் குடும்பங்கள் அனைத்தும் சிறைக்கு செல்லும் என்பது மோடியின் கியாரண்டி.
சமூக நீதி பேசும் படம் என்று கூறிவிட்டு அதிகளவில் பணம் சம்பாதித்து பாம்பே-யில் செட்டில் ஆகிவிடுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது குழந்தைக்கு பெயர் வைக்க பெற்றோர் கேட்டுக்கொண்ட நிலையில், உதயநிதி ஸ்டாலின் குழந்தைக்கு ரோலக்ஸ் என்ற போதை பொருள் கடத்தல்காரரின் பெயரை வைக்கிறார், இதுதான் இவர்களின் நிலைப்பாடு என்று அண்ணாமலை விமர்சனம் செய்தார்.