டபுள் டக்கர் பஸ்ஸில் இலவசமாக கோவையை சுற்றி பார்க்கலாம்
கோயமுத்தூர் விழா 2024 என்னும் பெயரில் கோவை மக்களின் பாரம்பரியம், கலாச்சாரம், சமூக உணர்வு ஆகியவற்றை வெளிக்கொணரும் விதமாக ஆண்டுதோறும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
வருகின்ற ஜனவரி 2 -ஆம் தேதி முதல் 8 – ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில், அம்மாவட்ட மக்களின் இசை, கலாச்சார நிகழ்வுகள், உணவு திருவிழா, விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவையின் முக்கிய பகுதிகளை சுற்றி பார்க்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பாக இரண்டு டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய bit.ly/doubletakkar என்ற இணைத்தளத்தில் பதிவு செய்து பயணம் செய்யலாம்.
தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை நகரின் மேட்டுப்பாளையம் சாலை, கணபதி மேம்பாலம், அவிநாசி சாலை, திருச்சி சாலை ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன, பேருந்தில் சுமார் 30 முதல் 45 நிமிடம் வரை பயணம் மேற்கொள்ளலாம்.