கிரெடாய் வீட்டு கடன் முகாம் சென்னையில் நடைபெறுகிறது
வருகின்ற மார்ச் 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கிரெடாய் அமைப்பின் சார்பில் “கிரெடாய் ஃபேர் ப்ரோ 2024” (CREDAI FAIR PRO 2024) என்னும் ரியல் எஸ்டேட் துறையின் கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. வீடு விற்பனையில் மிகப்பெரிய கண்காட்சியாக இது இருக்கும்.
இந்த கண்காட்சியில் பங்கேற்று வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் தங்களுக்கான வீட்டு கடன் விவரங்களை தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக கிரெடாய் அமைப்பின் சார்பில் வீட்டு கடன் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள விஜயா மஹாலில் மார்ச் ஒன்றாம் தேதி துவங்கி மூன்றாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இந்த முகாம் நடைபெறுகிறது.
துவக்க விழா நிகழ்ச்சியில் கிரெடாய் அமைப்பின் தேசிய துணை தலைவர் ஸ்ரீதரன், முன்னாள் தலைவர்கள் கிரெடாய் மண்டல தலைவர் சிவகுருநாதன், ஃபேர் ப்ரோ 2024 ஒருங்கிணைப்பாளர் அஸ்லாம் பக்கீர் முஹம்மது, கிரெடாய் சென்னை செயலாளர் க்ருதிவாஸ் மற்றும் வங்கியின் மேலாளர்கள் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
இந்த வீட்டு கடன் முகாமில் இந்தியாவின் முன்னணி வீட்டு கடன் வழங்கும் வங்கிகளான எஸ்.பி.ஐ. வங்கி, எச்.டி.எப்,சி. வங்கி, கனரா வாங்கி, இந்தியன் வங்கி, எல்.ஐ.சி ஆகியவை பங்கேற்றுள்ளன.
கிரெடாய் ஃபேர் ப்ரோ 2024-ல் பங்கு கொண்டு வீடு வாங்க திட்டமுள்ளவர்கள் அதற்கு முன்பாக இந்த மேளாவிற்கு வருகை தந்து, தங்களுக்கு எந்தந்த வங்கிகளில் கடன் கிடைக்கும், எவ்வளவு கிடைக்கும், வட்டி விகிதம், கட்டண விவரங்கள், தவணை முறைகள் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வதோடு, முகாமிலேயே வீட்டுக்கடனை பெறுவதற்குண்டான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால், நந்தம்பாக்கத்தில் நடக்கவுள்ள ஃபேர் ப்ரோ 2024 – ல் வீடு வாங்கும்போது எளிதாக இருக்கும் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.