விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ‘சம்பூர்ணா பூஜா கிட்’: சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம்
சென்னை, மே 16–
விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நாடு முழுவதும் கோலாகலமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் 18–ந்தேதி வினாயகர் சதுர்த்தியை மக்கள் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட ஊதுபத்தி தயாரிப்பில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் சைக்கிள் பியூர் அகர்பத்தி ‘சம்பூர்ணா பூஜா கிட்’ என்னும் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது.
சம்பூர்ணா பூஜா கிட் என்பது ஒரு முழுமையான மற்றும் பாரம்பரியமான வினாயக சதுர்த்தி பூஜைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் கொண்டுள்ள தொகுப்பாகும், இது பக்தர்கள் வினாயகப் பெருமானை பக்தியுடன் வழிபடுவதற்கு எளிதாகவும் வசதியாகவும் ஆக்குகிறது. இந்த பூஜை தொகுப்பில் வினாயகர் சிலை (விசர்ஜனம்), ஹரித்ரா, குங்குமம், வஸ்திரம், பீடம், பூஜை மணி, கப் சாம்பிராணி, தியா, கங்கணா, சந்தன வில்லைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் உள்ளன. இதன் காரணமாக நாம் ஒவ்வொரு பொருளையும் தேடி ஒவ்வொரு இடத்திற்கு செல்ல வேண்டியதில்லை. இந்த ஒரே தொகுப்பில் வினாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான அனைத்து பொருட்களும் உள்ளன.
இதன் விலை 799 ரூபாய் ஆகும். இந்த கிட் இந்நிறுவனத்தின் இணையதளம் www.cycle.in–ல் கிடைக்கிறது.
இந்தியாவில், வினாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. வினாயகப் பெருமான் அவதரித்த இந்த நாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. நமது பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், வேதங்களின் புனித போதனைகளை கடைபிடிக்கவும், இந்த திருவிழாவின் போது வரசித்தி வினாயக விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வேத விற்பன்னர்களின் ஆலோசனையின்படி இந்த பூஜை தொகுப்பில் உள்ள அனைத்து பொருட்களும் எளிமையான மற்றும் முழுமையான பூஜை நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் உள்ளன.
பரபரப்பான இந்த காலக்கட்டத்தில் வினாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்புபவர்கள் அதற்கான பொருட்களை கண்டறிந்து வாங்குவது என்பது மிகுந்த சிரமமான ஒன்றாக இருந்து வரும் சூழலில், வேலைக்கு செல்பவர்கள், வீட்டில் இருக்கும் தாய்மார்கள், இல்லத்தரசிகள், புதுமணத் தம்பதிகள், முதல் முறையாக வினாயகர் சதுர்த்தியை கொண்டாட விரும்புபவர்கள் என அனைவரும் வினாயகப் பெருமானை பக்தியுடன் வணங்கி பூஜிப்பதற்கான அனைத்து பூஜை பொருட்களுடன் இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. வினாயகர் சதுர்த்தி விழாவை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் ‘சம்பூர்ணா பூஜா கிட்’டை சைக்கிள் பியூர் அகர்பத்தி அறிமுகம் செய்துள்ளது.
இந்த தயாரிப்பு பற்றி சைக்கிள் பியூர் அகர்பத்தியின் நிர்வாக இயக்குனர் அர்ஜுன் ரங்கா கூறுகையில், ‘சைக்கிள் பியூர் எப்போதும் மக்களின் ஆன்மீக பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது, மேலும் இந்த புனிதமான பண்டிகையை கொண்டாடும் பக்தர்களுக்கு முழுமையான மற்றும் செழுமையான அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும். பிரார்த்தனை, கொண்டாட்டம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு மதிப்பளிக்கும் எங்கள் பிராண்டின் நிலைத்தன்மை நெறிமுறைகளுடன் இணைந்த தூய்மையான மற்றும் உயர்தர பொருட்களை இந்த தொகுப்பில் நாங்கள் வழங்கி இருக்கிறோம். இதில் உள்ள வினாயகர் சிலை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் எளிமையாக தண்ணீரில் மூழ்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எங்களின் இந்த புதிய பூஜை கிட் மூலம், மக்களை பாரம்பரிய பூஜை நடைமுறைகளை கடைப்பிடிப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று தெரிவித்தார்.
ஆன்மீகத்தின் மீது அதிக நாட்டம் கொண்ட இந்திய மக்கள் தெய்வீகக் கொள்கைகளுடன் பாரம்பரிய பண்டிகைகளை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், வினாயகர் சதுர்த்தியையொட்டி வினாயகப் பெருமான் சிலையை வீட்டில் பிரதிஷ்டை செய்து வழிபடுகிறார்கள். இந்த கொண்டாட்டத்தை மேலும் சிறப்பிக்கும் விதமாக சைக்கிள் பியூர் அகர்பத்தி இந்த சந்தர்ப்பத்தில் பிரத்யேக தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.