பத்திர பதிவுத்துறையில் எல்லையே இல்லாமல் தலை விரித்தாடும் லஞ்சம்; பாதிக்கபடும் விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் அகில இந்திய தலைவர் ஹென்றி குற்றச்சாட்டு
சென்னை: சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் அகில இந்திய தலைவர் டாக்டர்.A.ஹென்றி தலைமையில் கூட்டமைப்பின் 8வது தேசிய மற்றும் மாநிலச் செயற்குழு பொறுப்பாளருக்கான தேர்தல் நவம்பர் 30-ஆம் தேதியன்று அன்று நடைபெற்றது.
அப்போதுஅவர் கூறுகையில் கூட்டமைப்பின் 8வது தேசிய மற்றும் மாநிலச் செயற்குழு பொறுப்பாளருக்கான தேர்தல் 30 நவம்பர் அன்று நடைபெற்றது. இதில் தேசிய குழுவிற்கு பொதுச் செயலாளராக ஜெயச்சந்திரன், செயல் தலைவராக கோவை செந்தில்குமார், நிர்வாக செயலாளராக அரியலூர் கிருஷ்ணகுமார், வளர்ச்சி செயலாளராக திருவண்ணாமலை நரேஷ்சந்த்,பொருளாளராக சிகரம் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் இவர்கள் 2026, 2027 ஆகிய 2ஆண்டுகள் பதவி வகிப்பார்கள் என்று கூறினார்.
அதனை தொடர்ந்து சென்னை மற்றும் வளர்ந்து வரும் நகரங்களில் விரிவாக்கத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்கள் பற்றி சரியான முறையில் தகவல் தெரிவிக்கவில்லை. இது எங்களைப் போன்ற தொழில் செய்பவர்களுக்கு பாதிப்பாக உள்ளது . அதனை உடனடியாக சரியான முறையில் தெளிவுபடுத்த வேண்டும். உதாரணத்திற்கு கோவை மாநகராட்சி பகுதிகளில் ஒரே சர்வே எண் கொண்ட பிரிவு எண்களில் மனைப் பிரிவாகவும், விளை நிலமாகவும் உள்ளது. ஆகவே இங்கு ஒரு பகுதி வீட்டுமனையாகவும் மற்றொன்று விளைநிலமாக உள்ள நிலையில் இதை சேர்த்து வாங்கவோ, விற்கவோ முடிவதில்லை.
மேலும் ரியல் எஸ்டேட் தொழிலில் பத்திர பதிவுத் துறையில் அரசின் வழிகாட்டுதல் மதிப்பீட்டை மீறி அனைத்து பிரிவுகளிலும் அரசு கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்துகிறார்கள் .
இதனால் இலஞ்சம் என்பது பொதுவான அலுவலக செயல்பாட்டில் ஒன்று என்று அதிகாரபூர்வமற்ற நடைமுறையாக பின்பற்ற காரணமாகிவிடுகிறது.
இது மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை செயல்பாட்டில் உள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டால் அனைத்திற்கும் பத்திர பதிவுத்துறை அமைச்சரேயே சுட்டிகாட்டுகிறார்கள். அரசுக்கு வருமானம் ஈட்டித்தர வேண்டிய கட்டாயத்தில் பதிவுத்துறை அதிகாரிகள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள் .
மக்கள் படும் இன்னல்கள் முதல்வருக்கு தெரியமா?
நல்லாட்சி நடத்தி வரும் தமிழக முதல்வருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று செயல் நடைபெறுகிறதா? என்பதுதான் எங்கள் கேள்வி. பதிவுத்திறை அவலங்கள் ஒருபுறம் இருக்கையில் ஊராட்சித் தலைவர்களின் அதிகாரம் அளவு மிஞ்சியது. முதலீடு செய்யும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் உடன் பிறந்த பங்காளிகள் போல் முதலீட்டில் பங்கு கேட்கிறார்கள். இவர்களுக்கு இலஞ்சம் தரவில்லை என்றால் பல்வேறு இடையூறுகள் செய்து காரியத்தை சாதித்து கொள்கிறார்கள். இதனால் பாதிக்கப்பட போவது வீட்டுமனை வாங்கும் பொதுமக்கள் தான்.
இந்த அவலங்களை நேரில் சம்பந்தபட்டவரை சந்தித்து பிரச்சினையை சரி செய்யலாம் என்றால், அதற்கு என்ன வழி என்றுதெரியவில்லை. இது தொடர்பாக முதல்வருக்கு புகார் அளித்துள்ளோம் என்று வேதனையுடன் தெரிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது புதிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

