ஜியோ இந்தியா அறக்கட்டளையின் பெண் சாதனையாளர் விருதுகள்
உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக ஜியோ இந்தியா அறக்கட்டளையின் சார்பில் சென்னை மைலாப்பூரில் உள்ள சிட்டி சென்டர் மாலில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தமிழ் திரைப்பட நடிகை இனியா, ஆரண்யா அறக்கட்டளையின் நிறுவனர் ஷில்பம் கபூர் ரத்தோர், ஆடை வடிவமைப்பாளர் கருண் ராமன், ஒய்.எம்.சி.ஏ மெட்ராஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆசீர் பாண்டியன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தங்களது துறையில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய 15 மகளிருக்கு சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
நெக்சஸ் மக்கள் தொடர்பு நிறுவனத்தை சேர்ந்த விஜயலக்ஷ்மி, மருத்துவர் சுதா, ரேகா பிரியதர்ஷினி, காயத்ரி சங்கர், அனிதா ஸ்ரீநாத், சுகந்தா வேல்முருகன், கல்யாணந்தி சச்சிதானந்தன், புவனா ராஜ், மருத்துவர் சிவ உமையாள் பிரேமாவதி, செல்வி பொற்கொடி பழனியப்பன், டாக்டர் ராஜமீனாட்சி, திருமதி தேவிகலா ஆகியோருக்கு சிறப்பு விருந்தினர்கள் விருதுகளை வழங்கினர்.
மேலும், ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சவுத் சார்பில் சிறு தொழில் செய்ய உதவியாக 10 பெண்களுக்கு சிறிய கடைகளும், ரோட்டரி கிளப் ஆப் ஸ்பாட் லைட் மூலம் 10 பெண்களுக்கு தையம் இயந்திரமும் வழங்கப்பட்டன.
விருதுபெற்ற அனைவரும் சமூகத்தில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பர் என்றும். கிராமப்புற பெண்களை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக ஜியோ இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் ப்ரியா தெரிவித்தார்.