டிஜிட்டல் பயிற்சியின் மூலம் தொழில்முனைவோராகும் கிராமப்புற இளைஞர்கள்
கிராமப்புற இளைஞர்களுக்கு மென்பொருள் மற்றும் அதைச்சார்ந்த துறைகளில் தொழில் முனைவோர்களாக ஆக்கவும், முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களில் பணியமர்த்தவும் நாஸ்காம் தொண்டு நிறுவனமும், டி.எக்ஸ்.சி மென்பொருள் நிறுவனமும் இணைந்து பயிற்சி வழங்கி வருகிறது.
நாஸ்காம் மற்றும் டி.எக்ஸ்.சி ஆகிய இரண்டு நிறுவனமும் தங்களது சி.எஸ்.ஆர் எனப்படும் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பின் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்த சேவையை வழங்கி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இச்சேவையை வெற்றி கரமாக வழங்கி வரும் நிலையில், தற்போது மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், நாஸ்காம் தொண்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நிதி பசின், டி.எக்ஸ்.சி மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நச்சிகேட் சுக்தங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசுகையில்,
டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியா அரசாங்கம் மக்களுக்கு வழங்கும் திட்டங்களையும், சலுகைகளையும் பற்றி தெரிந்துகொள்ளவும், அவற்றை எவ்வாறு பெறுவது, பயனாளர்களுக்கு கொண்டு சேர்ப்பது அதன் மூலம் எவ்வாறு வருமானம் ஈட்டுவது என்று கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம்.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்களுக்கு கூடுதலாக தேவைப்படும் தொழில்நுட்பம் சார்ந்த கணினி மொழி பயிற்சிகளான ஜாவா, பாந்தோம், சி உள்ளிட்ட மென்பொருள் மொழி பயிற்சிகளையும் வழங்குவதோடு அவர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களில் நேர்முக தேர்வை எதிர்கொள்வதற்கு தேவையான பயிற்சிகளும் சேர்த்து வழங்குவதாக .எக்ஸ்.சி மென்பொருள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நச்சிகேட் சுக்தங்கர் தெரிவித்தார்.
போதிய தகுதியின்மை என்கிற காரணத்தால் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பில் பின்தங்கிவிட கூடாது என்று நினைக்கிறோம். இந்த திட்டத்தின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் சுமார் 25000 இளைஞர்களுக்கு பயிற்சியளித்துள்ளோம்.
குறிப்பாக தமிழகத்தில் 1400 நபர்களுக்கு பயிற்சியளித்ததில் 800 பேர் தொழில்முனைவோர்களாக உருவாகியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று நாஸ்காம் தொண்டு நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நிதி பசின் தெரிவித்தார்.