General

தமிழகத்தில் ஆண்டிற்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்; மருத்துவர் ராஜசுந்தரம் தகவல்

சென்னை பள்ளிக்கரணையில் கிளேனெகில்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனையின் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயணம் நடைபெற்றது.

உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் ஆசான் கல்லூரி, இந்துஸ்தான் மற்றும் முகமது சதக் உள்ளிட்ட கல்லூரிகளில் பயிலும் சுமார் 650 மாணவ மாணவிகளும், கிளேனெகில்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனையின் ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் ஏரளாமானோர் கலந்துகொண்டனர்.

பள்ளிக்கரனையில் உள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக்கழக வாயிலில் துவங்கிய இந்த நடைப்பயணத்தை கிளேனெகில்ஸ் ஹெல்த்சிட்டி மருத்துவமனையின் இயக்குனரும் பேராசிரியரும் புற்றுநோயியல் அறுவை சிகிச்சை பிரிவு தலைவருமான மருத்துவர் ராஜசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அங்கிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பள்ளிக்கரணை ஜெயச்சந்திரன் வரை இந்நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

நடைப்பயணத்தில் கலந்துகொண்டவர்கள் ,புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது, புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடைபயணம் மேற்கொண்டனர்.

மருத்துவர் ராஜசுந்தரம் நிகழ்ச்சியின் இறுதியில் பேசுகையில்,

புற்றுநோய் குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால் இதுபோன்று நடைபயணம், மாரத்தான் போன்றவைகளின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஒரு கோடி பேரும், இந்தியாவில் 17 லட்சம், குறிப்பாக தமிழகத்தில் ஒரு லட்சம் நபர்களும் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

50 சதவீத பெண்கள் மார்பக புற்றுநோய், கர்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கு நுரையீரல், இரைப்பை, வாய் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் பெருமளவில் வருகிறது.

அவ்வப்போது புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம், ஆரம்பக்கட்டத்தில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் முற்றிலும் குணப்படுத்த முடியும்.

போதை பொருட்களை தவிர்த்து, நல்ல உணவு பழக்கவழக்கங்களை கடைபிடிப்பதன் மூலமும், போதை பொருட்களை முற்றிலும் கைவிடுவதின் மூலமும் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *