General

IET India Scholarship Award 2023

ரூபாய் பத்து லட்சம் மதிப்பிலான உதவித்தொகை பெற பொறியியல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஏப்.26:

Institution of Engineering and Technology (IET) இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி (ஐஇடி) ‘ஐஇடி இந்தியா ஸ்காலர்ஷிப் விருதிற்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவித்துள்ளது.

7வது ஆண்டாக இந்த கல்வி உதவித் தொகையை இது வழங்குகிறது. வருங்கால பொறியியல் தலைவர்களை கௌரவிக்கும் விதமாக மொத்தம் 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை இக்கல்வி நிறுவனம் வழங்குகிறது.

அனைத்து AICTE, UGC ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் மற்றும் தேசிய கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்களும் இந்த கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் உள்ள இளங்கலை பொறியியல் மாணவர்களின் தனிப்பட்ட சிறப்பையும் புதுமையையும் திறமையையும் பரிசு அளித்து கவுரவிக்கும் நோக்கில் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தை இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி செயல்படுத்தி வருகிறது.

இது நாட்டின் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய உதவித்தொகை ஆகும்.

இந்த உதவித் தொகையை பெற மேற்குறிப்பிட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் வரும் ஜூன் 3–ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்கேற்ற முந்தைய வெற்றியாளர்கள் ஆப்பிள், போயிங், டெலாய்ட் மற்றும் எம்ஐடி போன்ற முன்னணி உலகளாவிய நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர், மேலும் சிலர் தொழில் முனைவோராகவும் மாறியுள்ளனர்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் கல்வி மற்றும் தொழில்நுட்ப திறன்கள், படைப்பாற்றல், புதுமை மற்றும் விளக்கக்காட்சி திறன் ஆகிய 4 நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இது குறித்து ஐஇடி இந்தியா நிறுவனத்தின் இயக்குனரும், தேசியத் தலைவருமான சேகர் சன்யால் கூறுகையில், தொழில்நுட்பம் சார்ந்த எதிர்காலத்திற்குள் நாம் நுழையும்போது, வருங்கால இளம் பொறியியல் தலைவர்களை அங்கீகரிப்பதும், ஊக்குவிப்பதும் முன்னெப்போதையும் விட இந்தக் காலக்கட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

எங்களின் இந்த ஸ்காலர்ஷிப் விருது என்பது பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தனி நபரை கவுரவித்து ஊக்கப்படுத்துவதற்காக வழங்கப்படும் உதவித் தொகையாகும். கடந்த ஆண்டு ஏராளமான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரப்பெற்றன. அந்த வகையில் இந்த ஆண்டும் அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *