தமிழ் செய்திகள்

கோவையில் 30 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் மருத்துவ கருவி ஆய்வகம்

சென்னை: மருத்துவ கருவிகளை பரிசோதனை செய்வதில் முன்னணி நிறுவனமான இத்தாலி நாட்டை சேர்ந்த IMQ நிறுவனம் சென்னையை சேர்ந்த Elettratech நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் IMQ India என்னும் நிறுவனத்தை துவங்கியுள்ளது.

அதன் துவக்க விழா நிகழ்ச்சியில், IMQ குழுமத்தின் தலைவர் வின்சென்சோ டீ மார்ட்டினா, தலைமை செயல் அலுவலர் ஸ்டெபனோ பெர்ரெட்டி, IMQ இந்தியா நிறுவனத்தின் தலைமை இயக்க அலுவலர் கிரண் ராஜு நாராயண் மற்றும் தலைமை தொழில்நுட்ப அலுவலர் சரவணன் ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாடு துறை இயக்குனர் எம் என் ஸ்ரீதர் நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றினார்.

அவர் பேசுகையில்: “மருத்துவ கருவி சோதனை துறையில் பல்வேறு சவால்கள் உள்ளன. இந்து துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கோயம்புத்தூரில் மருத்துவ கருவி பரிசோதனை ஆய்வகம் உருவாக்க உள்ளது. சுமார் 30 கோடி ரூபாய் செலவில் அமையவிருக்கும் இந்த ஆய்வகம் பகுப்பாய்வாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க வழி வகை செய்யும். இதற்காக மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு செய்யவுள்ளன.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருந்து ஆய்வாளர்களுக்கான (Drug Inspectors) பயிற்சி திட்டங்கள் நடத்தி இதன் மூலம் அவர்களின் திறன் வளர்க்கப்படும் என்று கூறினார்.

IMQ குழுமத்தின் அதிகாரிகள் பேசுகையில், ” தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியிலும், உற்பத்தியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எங்களது “China + 1″ திட்டத்தின் மூலம் இந்தியாவில் தமிழ்நாட்டை தேர்ந்தெடுக்க இது ஒரு முக்கிய காரணமாகும்.” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *