ஐ.ஓ.பி. வங்கியின் 88 ஆவது நிறுவன தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள்
ஐ.ஓ.பி. வங்கியின் 88 ஆவது நிறுவன தினத்தையொட்டி சென்னை புரசைவாக்கத்தில் இயங்கி வரும் ஐ.ஓ.பி. வங்கி கிளையின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்களை வழங்கினார்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வங்கியின் சார்பாக 2 லட்சத்து 35 ஆயிரத்து 650 ரூபாய்கான காசோலை எம்.எல்.ஏ விடம் வழங்கப்பட்டது.
பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஐ.ஓ.பி. வங்கி புரசைவாக்கம் கிளையில் நீண்ட காலமாக கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரை வங்கியின் முதன்மை மண்டல அதிகாரி தேவேந்தர்குமார் கௌரவித்தார்.