காஞ்சி ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் தீர்த்தவாரி
காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான மண் ஸ்தலமாக உள்ள அருள்மிகு ஏலவார்க் குழலி உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் ஸ்ரீ ஏகாம்பரநாதர் சாமிக்கு பல்வேறு வண்ண மலர்கள் சூடி பல்வேறு வாகனங்களில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனை தொடர்ந்து இன்று தீர்த்தவாரி நடைபெற்றது.
பாதுகாப்பு காரணங்களுக்காக ஐந்து சிவாச்சாரியார்கள் மட்டுமே பூஜைக்கு அனுமதிக்கப்பட்டு நிலையில் அஸ்திரதேவருக்கு புனித கும்ப நீர் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு தீபாரதனைகள் நடைபெற்றது.
தீர்த்தவாரி உற்சவத்தை காண மட்டுமே அனுமதித்த நிலையில் பக்தர்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் புனித நீர் தெளிக்கப்பட்டது.