உள்ளூர் வாசிகளை இணைக்கும் ஹைபர் லோக்கல் ஆப் KYN சென்னையில் அறிமுகம்
ஒரு நகரத்தில் வாழும் அக்கம்பக்கத்தினரை அறிந்து கொள்ளும் விதமாக ஹைபர் லோக்கல் ஆப் அடிப்படையில் KYN (Know Your Neighbourhood) கின் என்னும் சமூக ஊடக செயலி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Kynhood Technologies என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த செயலியின் அறிமுக விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி விஞ்ஞானி நம்பி நாராயணன், தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நடிகர்கள் மாதவன், சித்தார்த், தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன், துர்கா ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மின்விளக்கு ஒளிரச்செய்து KYN ஆப்பினை அறிமுகம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தொழில்நுட்ப வளர்ச்சி நாட்டிலும், சமுதாயத்திலும், தனி மனித வாழ்விலும் பல முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது. கல்வியில் பெரும் புரட்சியை கொண்டு வந்துள்ளது. அதே சமயம் மொபைல் போன்கள் அனைவரையும் தனிமைப்படுத்தியுள்ளது என்று கூறிய அவர், இந்த செயலியின் மூலம் அக்கம்பக்கத்தினரை எளிதாக நட்பு பாராட்டலாம் என்று கூறினார்.
இதுகுறித்து kynhood technologies நிறுவனத்தின் சி.இ.ஓ காயத்ரி தியாகராஜன் கூறுகையில், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி ஒரு நகரத்தில் தொலைக்காட்சி, செய்தித்தாள், சமூக ஊடகம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதை போன்றதாகவும்.
இதன்மூலம் இளைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் சமூக ஊடகமாகவும், உள்ளூர் வியாபாரிகள் தங்களது வியாபாரத்தை பெருக்கி கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதிகளவிலான followers , subscribers போன்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒருவரின் திறமைகள் பெரும்பாலான மக்களை சென்றடைய செய்யலாம்.
சென்னையை 14 மண்டலங்களாக பிரித்து இந்த செயலி செயல்படும். வருங்காலங்களில் மதுரை, திருச்சி, கோவை போன்ற தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சென்னை மட்டுமின்றி உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், ஆன்மிக நிகழ்வுகளை நேரலையாக செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
KYN App – ஐ மொபைல் போன்களில் டவுன்லோடு செய்ய
Android: kynhood technologies private limited on Google Play
Apple: kynhood technologies private limited on Apple Store\
KYN App பற்றி மேலும் தெரிந்துகொள்ள
Website : https://www.kynhood.com/
App Web Version : https://app.kynhood.com/
Facebook : https://www.facebook.com/kynhoodofficial
Instagram : https://www.instagram.com/kynhood/
LinkedIn : https://www.linkedin.com/company/kynhood/
Twitter : https://twitter.com/kyn_hood
Youtube : https://www.youtube.com/@kynhood