மெஜெஸ்டிக் ப்ரைடு கேசினோ நிறுவனத்தின் 15 ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்
கோவாவில் புகழ்பெற்ற கேசினோ விளையாட்டு நிறுவனமான மெஜஸ்டிக் ப்ரைடு கடந்த ஜனவரியில் தனது 15 ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக ஜனவரி மாதம் முழுவதும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளை நடத்தியது.
பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், ஸ்டாண்ட்அப் காமெடியன்கள், பாடகர்கள் ஆகியோர் இந்த கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
ஜனவரி முதல் வாரத்தில், பாலிவுட் நடிகை மௌனி ராய் கலந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என அரங்கத்தை அதிரவிட்டதோடு, தனது கையெழுத்திட்ட டீ ஷர்ட்டுகளை ரசிகர்களுக்கு வழங்கினார்.
இரண்டாம் வாரத்தில் நடிகை மலைக்கா அரோராவின் நடனத்திலும், பாடகி நேஹா கக்கா தனது வசீகர குரலில் பாடல் பாடி ரசிகர்களை உறசாகப்படுத்தினர்.
மூன்றாம் வார கொண்டாட்டத்தில், கிரிக்கெட் வீரர் ஷிக்கர் தவான் கலந்துகொண்டு தனது அனுபவங்களை ரசிகர்களோடு பகிர்ந்து கொண்டார்.
கடைசி வாரத்தில், நடிகர் நீல் நிதின் முகேஷ், ராப் பாடகர் பாட்ஷா, தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அனுசுயா பரத்வாஜ், பாடகி மங்கிலி ஆகியோரின் நிகழ்ச்சிகளால் அரங்கம் உற்சாகமடைந்தது.
அதேபோல், ஒவ்வொரு வாரமும் சிறுவர்கள், பெண்களுக்கான நிகழ்ச்சிகளும், மேஜிக் ஷோக்களும், ஸ்டான்ட்அப் காமெடியன்களின் நிகழ்ச்சிகள் என அனைத்து வயதினருக்கும் ஏற்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கொண்டாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு ஆந்திரா, பஞ்சாபி, குஜராத், கோவா, பெங்கால், உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.
சொகுசு கப்பல், கேசினோ பார்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கார், உயர்ரக மொபைல் போன், தங்கம் உள்ளிட்ட 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
நினைத்ததை விட ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியாக இந்த 15 ஆம் ஆண்டு கொண்டாட்டம் விளங்குகிறது. இது எங்களது வாடிக்கையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை கொடுத்திருக்கும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான ரவி கேசரி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ராகுல் கேட்ரபால் கூறுகையில், இந்த ஒரு மாத கால கொண்டாட்டம் என்பது, கடந்த வந்த வெற்றிக்கான கொண்டாட்டமாகவும், எதிர்கால வெற்றிக்கான உறுதிப்பாடாகவும் இருந்ததாக கூறினார்.
கடந்த 15 ஆண்டுகளாக மெஜெஸ்டிக் ப்ரைடு நிறுவனம் எங்களது வாடிக்கையாளர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், வரும்காலங்களிலும் இதே போன்ற ஆதரவை வாடிக்கையாளர்கள் கொடுக்க வேண்டுமென இயக்குனர் ஸ்ரீனிவாஸ் நாயக் கேட்டுக்கொண்டார்.
இந்த கொண்டாட்டம் தங்களது பதினைந்து வருட சாதனைகளை குறிப்பதோடு மட்டுமல்லாமல், அற்புதமான எதிர்காலத்திற்க்கான கொண்டாட்டமாகவும் அமைந்துள்ளது. இந்த நேரத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஈடு இணையற்ற ஒரு அனுபவத்தை வரும்காலங்களில் மெஜஸ்டிக் ப்ரைடு நிறுவனம் வழங்கும் என மெஜஸ்டிக் ப்ரைடு நிறுவனத்தின் தலைவர் அசோக் கேட்ரபால் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.