General

உணவுக்கலையில் சிறந்தவர்கள்: 12 சமையல் ஆர்வலர்கள் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

சென்னை: சோனி எல்ஐவி தொலைக்காட்சி, சமையல் உணர்வை வெளிப்படுத்தும் மாஸ்டர்செஃப் இந்தியா நிகழ்ச்சியை தமிழில் வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் மூலம் பிராந்திய உணவு வகைகளின் கவர்ந்திழுக்கும் சுவை உலகில் நீங்கள் மூழ்கத் தயாராகுங்கள். சமையல்கலை வல்லுனர்கள் கௌஷிக் சங்கர், ஸ்ரேயா அட்கா, ராகேஷ் ரகுநாதன் ஆகியோரின் நிபுணத்துவத்தால் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ், வீட்டில் உள்ள சமையல் கலைஞர்களை, சமையல் மேஸ்ட்ரோக்களாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது. கடுமையான தேர்வு முறைகளை தொடர்ந்து, மிகவும் ஆர்வமுள்ள வீட்டு சமையல் கலைஞர்கள் மட்டுமே மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் சமையலறையில் விரும்பத்தக்க இடத்தைப் பெற்றுள்ளனர்.

மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் சமையலறையில் இடம் பெற்றுள்ள 12 சமையல் கலைஞர்களைப் பற்றிய ஒரு பார்வை:

ஜரீனா பானுதுபாய்

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பட்கல் சுவைகளின் தனித்துவமான கலவையுடன் உங்கள் சுவை மொட்டுகளை சிலிர்க்க வைக்கும் வகையில் துபாயில் இருந்து ஜரீனா பானு என்ற வயதான பெண்மணியை அறிமுகப்படுத்துகிறோம்! ஜரீனா ஒரு சாதாரண சமையல் கலைஞர் மட்டுமல்ல, அவர் ஒரு அர்ப்பணிப்புள்ள மனைவி மற்றும் தாய் ஆவார். அவர் தனது வீட்டு சமையலறையிலேயே சமையல் பயணத்தை தொடங்கினார். தனது குடும்பத்தினரின் மகிழ்ச்சிக்காக தான் சமைக்கும் உணவுகளுக்கு சுவையூட்டினார். இப்போது, மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் தனது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பை பயன்படுத்த உள்ளார். துபாயில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்தும், அவரது மாமியாரின் சமையல் ஞானத்திலிருந்தும் உத்வேகம் பெற்ற ஜரீனாவின் உணவு படைப்புகள் பாரம்பரியம் மற்றும் புதுமைகளின் மகிழ்ச்சிகரமான கலவையாக அமையும். இது உங்களை மேலும் ஏங்க வைக்கும்!

பிரவீன் குமார்சென்னை

அடுத்து பிரவீன் குமாரை சந்திக்கலாம். இவர் ஒரு அர்ப்பணிப்புள்ள மகன், அவரது தாயின் வாழ்க்கையில் மகிழ்ச்சியை தருவது மட்டும் தான் அவரது மிகப்பெரிய மகிழ்ச்சியாகும். 7 வயதில் தனது தந்தையை இழந்த பிறகு, பிரவீனும் அவரது தாயாரும் பிரிக்க முடியாதவர்களாக மாறினர். அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் ஆறுதலாக உள்ளனர். மயங்க வைக்கும் சமையல் உலகத்தை அவருக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தியது அவரது தாயார் தான். இன்று, சமையல் வீடியோக்களுக்காக அவரை 75,800 பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். பிரவீன் குமார் ஒரு திறமையான சமையல் கலைஞராக மட்டுமல்லாமல், புளூ கிராஸ் தன்னார்வலராகவும், செல்லப்பிராணிகள் மீது ஈடுபாடு கொண்டவராகவும் விளங்குகிறார். ஓய்வு நேரத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு, பொழுதுபோக்குக்காக ஓவியம் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடுகிறார். பிரவீன் உண்மையிலேயே தங்கமான இதயம் உள்ள பன்முகத் திறமை கொண்டவர்!

ஆகாஷ் முரளிதரன்சென்னை

பழக்கத்தில் இருந்து மறந்துபோன பழங்கள் மற்றும் காய்கறிகளை மீண்டும் தேடி கண்டுபிடித்து கொண்டு வந்து கொண்டாட வைக்கும் சென்னையைச் சேர்ந்த உணவு ஆர்வலரான ஆகாஷ் முரளிதரனை சந்திக்கலாம். 70 க்கும் மேற்பட்ட உணவு கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ள அவர், உணவு வீணாவதை குறைப்பதற்கான புதுமையான வழிகளைக் கண்டுபிடிப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார். ஆகாஷ் தனது சமையலறையில் பரிசோதனை செய்வதில் பிசியாக இல்லாத நேரங்களில், தனது குடும்பத்தினருக்கு, தனது சகோதரனுடன் ருசியான உணவுகளை தயார் செய்வதை விரும்புகிறார். ஆகாஷின் சமையல் ஆர்வம் மற்றும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட தயாராகுங்கள்!

கவிதா ஏபாண்டிச்சேரி

பாண்டிச்சேரியில் இருந்து வந்துள்ள, உள்ளூர் உணவு மற்றும் மசாலா பொடிகளை விற்பனை செய்யும் கடைக்கு பெயர் பெற்ற சமையல் ரத்தினமான கவிதாவை சந்திக்கலாம். அவரது சமையல் கனவுகளை தொடருவதற்காக தனிப்பட்ட சவால்களை முறியடிக்கும் அவரது உத்வேகமான பயணமானது அவரது குறிப்பிடத்தக்க உறுதியையும் நெகிழ்ச்சியையும் எடுத்துக்காட்டுகிறது. தனது குழந்தைகளின் பாதுகாப்பை மீண்டும் பெறுவதற்கான இறுதி இலக்கால் உந்தப்பட்ட கவிதாவின் கதை உணவுக்கு அப்பாற்பட்டது. இது அவரது இயல்பு மற்றும் தைரியத்தின்  அசைக்க முடியாத வலிமைக்கு ஒரு சான்றாகும். ஒருவரின் கனவுகளை ஒருபோதும் கைவிடாத வகையில் உண்மையான சாராம்சத்தை வெளிப்படுத்தி, சுவையான உணவு படைப்புகளுடன் மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் அவர் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் போது அவருடன் சேருங்கள்!

பிரீத்தி ரகுநந்தன்சென்னை

ஒரு கிளவுட் கிச்சன் மூலம் சிறந்த பிரபலங்கள் பலரை மகிழ்வித்துள்ள சென்னையை சேர்ந்த, ‘வில்லா 51’ என்ற கிளவுட் கிச்சனின் உரிமையாளரான பிரீத்தியை நீங்கள் காணலாம். இரண்டு மகள்களின் தாயான பிரீத்தியின் சமையல் பயணம் தனது 7 வயதில் தொடங்கியது. ஜப்பான், தாய்லாந்து மற்றும் மலாய் போன்ற பான்-ஆசியா உணவு வகைகளில் அவருக்கு அதிக விருப்பம் உள்ளது. பிரீத்தி தனது கணவரை தனக்கு மிகப்பெரிய துணையாக கருதுகிறார்.

எம் ஜீவிகா ஸ்ரீகாஞ்சிபுரம்

உயர்நிலைப் பள்ளி மாணவியான ஜீவிகா தனது மூத்த சகோதரியுடன் கலகலப்பான வகையில் கேலி, கிண்டல் செய்வதில் தனித்து நிற்கிறார். இது இறுதியில் உணவு தொடர்பான மோதல்களை தீர்ப்பதில் முடிகிறது. இந்த தனித்துவமான ஆற்றலானது அவர்களின் உறவில் உணவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. அவர்களின் தொடர்புகளுக்கு நல்லிணக்கத்தை கொண்டுவர சமையல் மகிழ்ச்சியைப் பயன்படுத்துவதற்கான அவரது திறனைக் காட்டுகிறது.

சங்கீதா சுவாமிநாதன்பெங்களூரு

‘குக் வித் சங்கீதா’ என்ற உணவு சேனலுக்காக புகழ்பெற்றவர் சங்கீதா. இவரது சேனல் 1.34 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அவரது கணவரின் ஆதரவுடன், அவர் தனது சமையல் திறன்களால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கிறார். அவரது சமையல் பயணத்தில் குழுப்பணியில் தனது ஆற்றலை வெளிப்படுத்துகிறார்.

வாணி சுந்தர்திருநெல்வேலி

‘வாணி’ஸ் கிரியேட்டிவ் பேக்கர்ஸ்’ என்ற நிறுவனத்தின் பின்னால் இருக்கும் திறமையான ஹோம் பேக்கரான வாணி சுந்தர் தனது புதிய உணவு கண்டுபிடிப்பு படைப்புகளுக்கு பெயர் பெற்றவர். புதுமைக்கான சாமர்த்தியத்துடன், மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியில் தனது இனிமையான உபசரிப்புகளுடன் மகிழ்ச்சியடைவதாக உறுதியளிக்கிறார்.

பவித்ரா நளின்சென்னை

முன்னாள் உதவிப் பேராசிரியையான பவித்ரா நளின் திருமணம் மற்றும் தாய்மைக்கு பிறகு சமையலில் தனது ஆர்வத்தை கண்டறிந்தார். சமையல் கலையின் மூலம் தனது அடையாளத்தை நிலைநிறுத்திக் கொள்ள விரும்பும் அவர், மாஸ்டர்செஃப் இந்தியா தமிழ் சமையலறைக்கு அறிவுத்திறனையும் படைப்பாற்றலையும் கொண்டு வருகிறார்.

சுதீர் பதிஞ்சாராகலிபோர்னியா

தொற்றுநோய்க்கு மத்தியில், சமைக்க தொடங்கியது முதல் சமையல் ஆர்வலர் ஆனது வரை சுதீரின் பயணம் அவரை வேறுபடுத்துகிறது. 400 க்கும் மேற்பட்ட உணவுகளை உருவாக்கி, கலிபோர்னியாவில் ஒரு துடிப்பான உணவு டிரக்கை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற அவரது விருப்பம் அவரது லட்சியத்தையும் சமையல் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

நந்தகுமார்கொடைக்கானல்

நந்தாவின் தனித்துவமான விவசாயம் மற்றும் யூடியூப் வீடியோ அவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. அவர் தனது சமையலில் பண்ணையில் உள்ள ப்ரெஷ் ஆன பொருட்களைப் பயன்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். மேலும் போதிய பயிற்சிகள் மற்றும் உண்மையான சுவைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு அவரை சமையல் உலகில் தனித்துவமாக்குகிறது.

ஆர்த்திபெங்களூரு

சமையல் மீதான ஆர்வத்துடன் ஒரு எம்.என்.சி.யில் உயர்ந்த ஆற்றல்மிக்க நிலையில் உள்ள ஆர்த்தி, தனது வீட்டு உணவுகளில் அன்பையும் படைப்பாற்றலையும் புகுத்தும் திறனுக்காக தனித்து நிற்கிறார். தனது தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்கும் அதே வேளையில் தனது குழந்தைகளின் சுவை மொட்டுகளை திருப்திப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு அவரது பல பணி ஆற்றலையும் குடும்பத்துக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது.

தேதியை ஒதுக்கி, இந்த சமையல் பயணத்தில் எங்களுடன் சேருங்கள், கலாசார சுவைகள் மற்றும் பிராந்திய உணவுகளின் மாறுபட்ட சமையல் பாரம்பரியத்தை கொண்டாடுங்கள்! ஏப்ரல் 22 முதல், சோனி எல்ஐவியில் பிரத்தியேகமாக மாஸ்டர்செஃப் தமிழில் டியூன் செய்யுங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *