General

பிரசாந்த் மருத்துவமனை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னை வேளச்சேரியில் உள்ள பிரசாந்த் மருத்துவமனை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தேசிய சாலை விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பொதுமக்களிடையே சாலை விபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பிரசாந்த்கிருஷ்ணா மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மருத்துவர் பாஸ்கரன் ஆகியோர் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

பிரசாந்த் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியாவாறு இப்பேரணியில் கலந்துகொண்டனர்.

மருத்துவமனையில் துவங்கி, வேளச்சேரியின் பிரதான சாலைகளின் வழியே சென்ற சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இப்பேரணி நடைபெற்றது.

இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு மருத்துவமனை ஊழியர்கள் வேளச்சேரியின் முக்கிய சாலை சந்திப்புகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியாவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

இது குறித்து பிரசாந்த் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் பிரசாந்த்கிருஷ்ணா கூறுகையில்,

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூலம் சாலையை விழிப்புணர்வுடன் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் வலியுறுத்த இருக்கிறோம்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். விபத்து ஏற்பட்ட பின் சிக்கலான எலும்பியல் அல்லது நரம்பியல் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

சமூக நல்வாழ்வுக்கான எங்கள் முயற்சியானது மருத்துவத்திற்கு அப்பாற்பட்டது, மேலும் இந்த பிரச்சாரத்தின் மூலம், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், தனிநபர்களிடையே பொறுப்பான சாலை நடைமுறையை வளர்ப்பதுமே எங்களின் முக்கிய நோக்கமாகும். அதை நாங்கள் நிச்சயம் அடைவோம் என்று தெரிவித்தார்.

பிரசாந்த் மருத்துவமனைகளின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் பாஸ்கரன் கூறுகையில்,

இதுபோன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்கள் பொறுப்பான முறையில் வாகனம் ஓட்டும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இவை ஒரு பாதுகாப்பான மற்றும் அதிக பொறுப்புள்ள சமூகத்தை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. சாலைப் பாதுகாப்பு என்பது நம் அனைவருக்குமான பொறுப்பாகும்.

எனவே அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், சாலை பாதுகாப்பில் நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிப்பதிலும் எங்களின் பங்களிப்பு இருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *