ROM – தி ஃபிசியோ ரன் 2025: ஆரோக்கிய முதிர்வை முன்னெடுக்கும் ஐந்தாவது பதிப்பு
காட்டாங்குளத்தூர்: ஆரோக்கியமான முதிர்வை ஊக்குவிக்கும் வகையில் எஸ்.ஆர்.எம். இயன்முறை கல்லூரி நடத்திய ROM – தி ஃபிசியோ ரன் 2025, ஐந்தாவது பதிப்பு காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் நிறுவனத்தில் நிறைவடைந்தது.
இந்த ‘ஃபிசியோ ரன்’ தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைத்து, சுமார் 664 கிலோமீட்டர் தூரத்தை கடந்தது.
அக்டோபர் 7-ஆம் தேதி அரிச்சல் முனை கடற்கரை, தனுஷ்கோடியில் தொடங்கிய இந்த தொடர் ஓட்டம், எஸ்.ஆர்.எம். மதுரை, திருச்சிராப்பள்ளி, பாபுராயன்பேட்டை போன்ற வளாகங்கள் வழியாக காட்டாங்குளத்தூரில் முடிவடைந்தது.
“’தி ஃபிசியோ ரன்’ ஒரு நிகழ்வு அல்ல; எங்களின் அர்பணிப்பாகும். இதை முன்னெடுத்து நடத்திய எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்திற்கு எங்கள் நன்றியை கூறுகிறோம்,” என்று செல்வி எஸ். எப். மரியம் ஃபர்ஸனா, எஸ்.ஆர்.எம். இயன்முறை கல்லூரியின் இணைப் பேராசிரியர், ஒழுங்கமைப்பாளர் மற்றும் முன்னாள் மாணவி உரைத்தார்.
இந்நிகழ்விற்கு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆதரவாக இருந்த நிலையில், தொடக்க விழாவினை கேப்டன் அர்ஜுன் மேனன் (Commanding அதிகாரி, INS பருந்து), கமாண்டன்ட் இளவரசன் (இந்திய கடலோர காவல் துறை) மற்றும் டாக்டர் நிதின் எம். நாகர்கர் (சார்பு துணைவேந்தர், மருத்துவ மற்றும் உடல்நல அறிவியல் புலம், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்) இணைந்து தொடங்கி வைத்தனர்.
“ROM 2021-ஆம் ஆண்டு, இயக்கம் மற்றும் முன்னெச்சரிக்கை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டது; இன்று எஸ்.ஆர்.எம்.-இன் அனைத்து வளாகங்களை இணைக்கும் வகையில் இந்த தொடர் ஓட்டம் முன்னேறியுள்ளது. மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் அனைவரும் இதன் மூலம் ஒன்றிணைகின்றனர்,” என்று டாக்டர் டி. என். சுரேஷ், துணைப் பேராசிரியர், எஸ்.ஆர்.எம். இயன்முறை கல்லூரி, கூறினார்.
“ஆரோக்கியம் என்பது ஒரு சமூகத்தின் பொறுப்பாகும். ROM போன்ற முன்னெடுப்புகள், அனைவரும் ஒன்றிணைந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது,” என்று டாக்டர் நிதின் எம். நாகர்கர், சார்பு துணைவேந்தர் (எஸ்.ஆர்.எம். மருத்துவ மற்றும் உடல்நல அறிவியல் புலம்) வலியுறுத்தினார்.
ஒவ்வொரு வளாகத்திலுள்ள இடைவேளி நிறுத்தங்களில், மக்களுடன் நேரடியாக கலந்துரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு விளக்கேந்தல் (torch handover), மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், மற்றும் பேராசிரியர்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
பேராசிரியர் டி. எஸ். வீரகௌதமன், எஸ்.ஆர்.எம். இயன்முறை கல்லூரியின் மூத்த பேராசிரியர், கூறியதாவது:
“ROM என்பது ஆரோக்கியம் மற்றும் அர்பணிப்பின் தொடர் பயணம் ஆகும். இது தலைமுறைகளை இணைத்து, செயலின் மூலம் ஊக்கமளிக்கிறது.”
நிறைவு விழாவில் பங்கேற்பாளர்கள் மற்றும் விளக்கேந்திய மாணவ மாணவிகளுக்கு மரியாதை வழங்கப்பட்டது. இதன் மூலம், ‘தி ஃபிசியோ ரன் 2025’ (ROM – The Physio Run 2025) தலைமுறைகளை இணைக்கும் பாலமாக அமைந்தது, மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் ஆரோக்கியம், சேவை மற்றும் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தியது.