தமிழ் செய்திகள்

தமிழ்ப்பேராய விருதுகள் 2025-ன் விருதாளர்கள் அறிவிப்பு

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயம் சார்பில் ஆண்டுதோறும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள், சிறந்த தமிழ் இதழ்கள், சங்கங்கள் என 12 தலைப்புகளில் ரூ.20 இலட்சம் பெறுமான விருதுகளை வழங்கப்படுகிறது.

அந்த வகையில் 2025-ஆம் ஆண்டிற்கான தமிழ்ப்பேராய விருதுகள் பெறும் விருத்தாளர்கள் அறிவிப்பு குறித்தான செய்தியாளர் சந்திப்பு வடபழனி எஸ்.ஆர்.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

இதில், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகப் பதிவாளர் பொன்னுசாமி, தமிழ்ப்பேராயத் தலைவர் கரு. நாகராசன், தமிழ்ப்பேராயச் செயலர் ஜெய்கணேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்தாண்டிற்கான தமிழ்ப்பேராய விருதுகள் பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டது.

 விருதின் பெயர்நூல் / விருதாளர் பெயர்
  1.  புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருதுபெரியம்மை எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்
  2.  பாரதியார் கவிதை விருது  கண்ணாடியில் தெரியும் பறவை கவிஞர் இளம்பிறை
  3.  அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது  கண்ணாடி கிரகத்தின் கவலை எழுத்தாளர் மருதன்
  4.  ஜி.யூ. போப் மொழிபெயர்ப்பு விருது  ‘Arputha Thiruvanthathi’ Tmt. K. Padmaja Narayanan
  5.  ..ஜெ. அப்துல் கலாம் அறிவியல்தமிழ் மற்றும் தொழில்நுட்ப விருது    நிலவு எனும் கனவு முனைவர் பெ. சசிக்குமார்
  6.  பரிதிமாற் கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது  எகிப்தில் தமிழர் நாகரிகம் எழுத்தாளர் அமுதன்
  7.  முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூகநீதி விருது  பெண் எனும் போர்வாள் எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன்
  8.  சுதேசமித்திரன் தமிழ் இதழ் விருது  மகாகவி ஆசிரியர் : வதிலை பிரபா
  9.  தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது  திருவள்ளுவர் இலக்கிய மன்றம் தலைவர் : திரு. செல்லப்பன்
  10.  அருணாசலக் கவிராயர் விருது  ஆதித்தமிழர் கலைக்குழு நிறுவனர்  : அ. வினோத்  
  11.  பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருது  முனைவர் கோ. தெய்வநாயகம்

இதில், முதல் ஏழு விருதுகளுக்குரிய விருதாளர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படுவதோடு அந்த நூல்களைப் பதிப்பித்த பதிப்பாளர்களுக்கு தலா இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

இந்தாண்டு முத்துத்தாண்டவர் தமிழிசை விருதிற்குப் போதிய எண்ணிக்கையிலான தரமான நூல்கள் வராததால் அந்த விருது அளிக்கப்படவில்லை.

சிறந்த இதழ், தமிழ்ச் சங்கம், கலைக்குழுவிற்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும். பாரிவேந்தர் பைந்தமிழ் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

விருது வழங்கும் விழா வருகின்ற 24-ஆம் தேதியன்று காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம் வளாகத்தில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *