FINANCE

தொழில் துவங்க ஆசையா…Startup Thamizha – வில் பங்கேற்று முதலீடு பெற 10 நாட்களே உள்ளன

தமிழக இளைஞர்களின் சொந்த தொழில் துவக்கும் கனவை நினைவாக்க தமிழக அரசு ஸ்டார்ட் அப் டி.என் (STARTUP TN) என்னும் நிறுவனத்தை துவக்கியுள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் ஸ்டார்ட் அப் தமிழா (STARTUP TAMIZHA) என்னும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியை (REALITY TV SHOW) நடத்துகிறது.

இந்த நிகழ்ச்சியில் முன்னணி நிறுவனங்களை சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் கலந்துகொள்வார்கள்.

தொழில் துவங்க விருப்பமுள்ள இளைஞர்கள் குடும்ப சூழல் காரணமாகவும், நிதி காரணமாகவும் தொழில் துவங்குவதில் தடை ஏற்படலாம்.

இவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தாங்கள் துவங்கவுள்ள தொழில் சம்பந்தமான ஐடியாக்களை மற்றும் கண்டுபிடிப்புகளை முதலீட்டாளர்கள் முன்னிலையில் விவரிக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக கருதப்படும் சிறந்த படைப்பாளிகளை தொழில் முனைவோராக மாற்ற முதலீட்டாளர்கள் சுமார் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளனர்.

இந்நிகழ்ச்சி அனைத்தும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியாக ஒளிபரப்படவுள்ளது.

இதில் பங்கேற்று தொழில் துவங்க ஆர்வமுள்ளவர்கள் https://startupthamizha.tv/ என்கிற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

தொழில் முனைவோராக பதிவு செய்ய வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதியே கடைசி நாள்.

startup thamizha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *