தமிழ் செய்திகள்

சன்ஃபீஸ்ட் பானங்களை வழங்க பீட்சா ஹட் மெனுவில் வழங்க கூட்டாண்மையில் இணையும் ஐடிசி மற்றும் பீட்சா ஹட்

சென்னை: இந்நாட்டின் உணவு தொழில்துறையில் பெருநிறுவனங்கள் என புகழ் பெற்றிருக்கும் ஐடிசி மற்றும் பீட்சாஹட், முதன் முறையாக ஒரு கூட்டாண்மையில் இணைந்திருக்கின்றன. இதன் காரணமாக, மிக அதிகமாக விற்பனையாகும் சன்ஃபீஸ்ட் பானங்களான டார்க் ஃபேண்டஸி மில்க்‌ஷேக் மற்றும் மேங்கோ ஸ்மூத்தி ஆகியவை பீட்சாஹட் – ன் மெனுவில் இனி இடம்பெறும். தரம் மற்றும் புத்தாக்கத்தின் மீது இரு நிறுவனங்களும் சிறப்பு கவனம் செலுத்துகின்ற நிலையில், மாறிவரும் நுகர்வோர் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கு ஒரு மேம்படுத்தப்பட்ட அனுபவத்தை வழங்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.

பண்டிகை சீசனையொட்டி மக்களால் அதிகம் விரும்பப்படும் சன்ஃபீஸ்ட் பானங்களின் அறிமுகம், பீட்சாஹட் – ன் அறிவார்ந்த நுகர்வோர்களது கொண்டாட்டத்திற்கு மேலும் சுவை சேர்க்கும். தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்ற தருணமோ அல்லது இன்னும் வரவிருக்கின்ற பிற திருவிழாக்களோ எதுவாக இருப்பினும், கொண்டாட்ட விருந்துகளுக்கு மிகப் பொருத்தமான ஜோடியாக சன்ஃபீஸ்ட் – ன் இந்த இரு பானங்களும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சாக்லேட்டைப் பெரிதும் விரும்புவர்களுக்கு டார்க் ஃபேண்டஸி மில்க்‌ஷேக் மிகச்சிறப்பான தேர்வாக இருக்கும். சன்ஃபீஸ்ட் டார்க் ஃபேண்டஸியின் முத்திரைப்பதித்த சுவையுடன் பெல்ஜியம் சாக்லேட்டை வெல்வெட் போன்ற மில்க்‌ஷேக் செறிவுடன் இது ஒருங்கிணைக்கிறது. பழுத்த மாம்பழங்களின் இனிமையை உள்ளடக்கிய மேங்கோ ஸ்மூத்தி, பழம் மற்றும் க்ரீம் ஆகிய இரண்டின் ஆனந்தமளிக்கும் கலவையாக உருவாக்கப்பட்டிருப்பதால், புத்துணர்ச்சியூட்டும் பானத்தை விரும்பி தேடுபவர்களுக்கு சிறப்பான பானமாக இருக்கும்.

குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், குறிப்பாக குழந்தைகள் மற்றும் இளவயது நபர்கள் உட்பட, அனைத்து வயது பிரிவைச் சேர்ந்தவர்களின் மாறுபட்ட சுவை விருப்பங்களை ஒருங்கிணைந்து பூர்த்திசெய்ய இந்த இரு பிராண்டுகளுக்கும் பீட்சாஹட் – ன் மெனுவில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த பானங்கள் உதவும்.

பீட்சா ஹட் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரோஹன் பெவேகர் கூறியதாவது: “ஐடிசி உடனான இக்கூட்டாண்மை வழியாக நாங்கள் வழங்கும் உணவுகளின் அணிவரிசையை விரிவாக்குவதில் நாங்கள் உற்சாகமடைகிறோம். இந்த இரு பானங்களும் எமது மெனுவிற்கு மிக நேர்த்தியாக பலம் சேர்க்கின்றன. பணி நேரத்திற்குப் பிறகு சகப் பணியாளர்களுடன் ரிலாக்ஸ் செய்யும்போதோ அல்லது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு ருசியான உணவை அருந்தி அனுபவிக்கும்போதோ அல்லது நண்பர்கள், தோழிகளுடன் சிறப்பான தருணங்களை கொண்டாடும்போதோ எதுவாக இருப்பினும், எமது வாடிக்கையாளர்கள் அனுபவித்து மகிழ்கின்ற தருணங்களை இவை உருவாக்கும். இந்த பண்டிகை காலத்தின்போது இந்த பானங்களை அறிமுகம் செய்வது, பகிரப்படும் இத்தகைய இனிய அனுபவங்களை இன்னும் கூடுதல் சிறப்பானதாக ஆக்குகிறது.”

ஐடிசி ஃபுட்ஸ் நிறுவனத்தின் துணை தலைவர் & டெய்ரி மற்றும் பிவரேஜஸ் பிரிவின் தலைவருமான விவேக் கூக்கல் இக்கூட்டாண்மை குறித்து கூறியதாவது: “எமது அனைத்து முன்னெடுப்பு திட்டங்களின் மையமாக இருப்பவை நுகர்வோரின் விருப்பங்களே. எனவே, தனித்துவமான நுகர்வோர் அனுபவங்களை சாத்தியமாக்குவது எமது தொடர் முயற்சியாக இருந்து வருகிறது. இக்கூட்டாண்மையின் மூலம் சிறப்பான பீட்சாஹட் உணவுப்பொருட்களோடு மிக நேர்த்தியாகப் பொருந்துகின்ற மற்றும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படுகின்ற எமது இரு பானங்களை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். மேலும், நுகர்வோர்களுக்கு நிகரற்ற அனுபவத்தை வழங்க இரு முன்னணி உணவு பிராண்டுகளுக்கிடையே கூட்டிணைவின் மூலம் ஏற்படும் சிறப்பான ஆற்றலை பிரதிபலிப்பதாக இந்த ஒத்துழைப்பு நடவடிக்கை அமைகிறது,”

2024 அக்டோபர் முதல் இந்தியாவெங்கிலும் உள்ள அனைத்து பீட்சாஹட் அவுட்லெட்களிலும் இந்த சன்ஃபீஸ்ட் பானங்கள் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *