தனிஷ்க்கின் புதிய நகைத் தொகுப்பு ‘அகல்யம்’ உடன் ஆடி பெருக்கை கொண்டாடுங்கள்!
சென்னை: டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய நகை சில்லறை விற்பனை பிராண்டான தனிஷ்க், அமைதி, செழிப்பு மற்றும் புனிதமான தொடக்கங்களுடன் ஆரம்பிக்கும் ஆடி பெருக்குப் பருவத்தைக் கொண்டாடும் வகையில் ‘அகல்யம்’ என்ற புதிய ஆபரணத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது. ‘ஒளியையும், பெரும் ஆற்றலையும் தரும் ‘விளக்கு’ மீது கொண்டிருக்கும் அற்புதமான உணர்வினால் ஈர்க்கப்பட்டு ’அகல்யம்’ நகைத்தொகுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் பாரம்பரியத்தில் பல தலைமுறைகளாக புனிதமான ஒன்றாக வேரூன்றியிருக்கும் ’தீபம்’, ஒளி, ஞானம் மற்றும் தெய்வீகம் ஆகியவற்றைக் குறிக்கும் அடையாளமாக இருந்து வருகிறது. இந்தத் தொகுப்பு இந்தப் புனிதமானவற்றையும், அவை வெளிப்படுத்தும் உணர்வுகளையும் கெளரவிக்கும் வகையில் ‘அகல்யம்’ அறிமுகமாகியுள்ளது. இன்றைய ‘புதுமைப்பெண்’ணுக்காகவே பிரத்தியேக சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த நகைத்தொகுப்பு, பாரம்பரியத்தில் அவளுக்கென இருக்கும் பெருமையையும், வாழ்வின் முன்னேற்றத்தில் அவள் காட்டும் உத்வேகத்தையும் பிரதிபலிக்கிறது. மரபுகளில் அவள் வேரூன்றியிருந்தாலும் மாறி வரும் நவீன உலகில், அவளின் வசீகரத்தையும், தைரியத்
தமிழ் பாரம்பரியத்தின் வளமான காட்சி மொழியிலிருந்து, அழகியலுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது ’அகல்யம்’ நகைத்தொகுப்பு. நம்முடைய தமிழ் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றிய ’காமாட்சி விளக்கு’’ மற்றும் பாவை விளக்கு’ முதல் ’தூக்கு விளக்கு’’ மற்றும் தட்டு விளக்கு’ வரை பாரம்பரிய விளக்குகளின் புனித ஒளிக்கு மரியாதை செலுத்தும் ஒளிரும் நகை தொகுப்பாக அமைந்திருக்கிறது.
ஒளி மற்றும் தெய்வீகத்தின் காலத்தால் அழியாத சின்னங்கள், பழங்கால பாரம்பரியத்தை நவீன காலத்தில் நுட்பத்துடன் கலக்கும் அற்புதமான ஆபரணங்களாக கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு வடிவமைப்பும் நுணுக்கமான விவரணங்கள் கொண்டிருக்கும் ’காசு’ [Kasu accents] மற்றும் நேர்த்தியான ரவா அமைப்புகளிலிருந்து [Rava textures] உத்வேகம் பெற்று, அழகாக செதுக்கப்பட்ட ’நகாஷி’ வடிவங்கள் [Nakashi patterns] மற்றும் கிளாசிக் தென்னிந்திய கல் அமைப்புகள் வரை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் விலை ₹60,000 முதல் தொடங்குகிறது. இந்த நகைத்தொகுப்பின் மூலம், தனிஷ்க் உங்களை வெறும் ஆபரணங்களுக்காக மட்டுமல்லாமல், கலாச்சார மரபு, ஆன்மீக அடையாளங்கள் மற்றும் நீடித்து நிலைக்கும் நேர்த்தியின் கொண்டாட்டமாக இருக்கும் ஆபரணத் தொகுப்பைத் உங்களது பெருமையாக மாற்ற அழைக்கிறது.
அகல்யம் நகைத்தொகுப்பின் அறிமுக விழாவில் பேசிய திரு. அருண் நாராயண், சந்தைப்படுத்தல் மற்றும் சில்லறை விற்பனை பிரிவு துணைத் தலைவர், தனிஷ்க், டைட்டன் கம்பெனி லிமிடெட், “தனிஷ்கின் பயணத்தில் தமிழ்நாடு மிகவும் சிறப்பான ஒரு இடத்தைப் பிடித்துள்ளது; தமிழ்நாடு எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தை மட்டுமல்ல, ஓசூரில் உள்ள எங்கள் முதல் உற்பத்தி மையம் மற்றும் கதீட்ரல் சாலையில் உள்ள எங்கள் முதல் விற்பனை நிலையத்தின் தாயகமாகும். இந்த ஆண்டு ’’ஆடி கலெக்ஷன், நம்முடைய பாரம்பரியத்தில் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கும் நம்முடைய பந்தத்திற்கு அர்ப்பணிக்கபட்டிருக்கும் தொகுப்பாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒளி, தெய்வீகம் மற்றும் புதிய தொடக்கங்களைக் குறிக்கும் பாரம்பரிய தமிழ் விளக்குகளிலிருந்து நாங்கள் உத்வேகம் பெற்று ‘அகல்யம்’ நகைத்தொகுப்பை வடிவமைத்துள்ளோம். தமிழ்நாட்டின் ஒவ்வொரு புதுமைப் பெண்ணுக்கும் மரியாதை செலுத்துவதற்கான எங்களது வாய்ப்பாக இது அமைந்திருக்கிறது. தலைமுறை தலைமுறையாக மாற்றத்தை கருணையுடன் ஏற்றுக்கொண்டு வளமான மரபுகளை முன்னெடுத்துச் செல்லும் பெண்களுக்கு இந்த நகைத்தொகுப்பை சமர்ப்பிக்கிறோம்.. அவர்கள் இந்த நிலத்தின் உண்மையான அட
இந்த ஆடிப் பெருக்கு சீசனை தனிஷ்க் உடன் இணைந்து புதிய தொடக்கங்களைக் கொண்டாடுங்கள். செழிப்பை வெளிப்படுத்தும் நகைகளின் மூலம் உங்களது வீட்டிற்கு மங்களத்தை அழைத்து வாருங்கள். பாரம்பரியத்தில் வேரூன்றிய, ஆனால் இன்றைய நவீன உலகத்தின் உணர்வையும் எதிர்கொள்ளும் தனிஷ்க் பெண்ணுக்கு, இந்த நகைத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு ஆபரணமும் கருணை, வலிமை மற்றும் புதிய சாத்தியக்கூறுகளின் அடையாளமாக திகழும். தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் மீது 20% வரை தள்ளுபடி* [up to 20% off*] என்ற வரையறுக்கப்பட்ட கால பண்டிகை சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ள, ஆகஸ்ட் மாதம் தமிழ்நாட்டில் உங்களுக்கு அருகிலுள்ள தனிஷ்க் விற்பனை நிலையத்திற்குச் செல்லவும். இச்சலுகை ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 5, 2025 வரை வழங்கப்படுகிறது. இதனுடன், இந்த மாதம் தங்க பரிமாற்ற சலுகையையும் தனிஷ்க் வழங்குகிறது, இதில் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எந்த நகைக்கடைக்காரரிடமிருந்தும் வாங்கிய பழைய தங்கத்தைக் கொடுத்து புதிய தனிஷ்க் தங்க நகைகளாக மாற்றிக்கொள்ளலாம், இச்சலுகையானது கலாச்சாரத்தை நம்பகத்தன்மையுடனும் பெருமையுடனும் கொண்டாடும் புதுமை பெண்ணுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.