General

தனிஷ்க் வழங்கும் ‘க்ளாம்டேஸ்’ – அன்றாடம் அணியும் நவீன யுகத்தின் கவர்ச்சிகரமான நகைக்தொகுப்பு அறிமுகம்!

  • நீங்கள் ஒவ்வொரு நாளும் நீங்கள் ஜொலிக்க #MakeEverydaySparkle பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நகைகள் இந்த நகைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன

சென்னை, 22 ஏப்ரல் 2024: அட்சய திருதியையை நெருங்கி கொண்டிருப்பதை முன்னிட்டு, இந்தியாவின் மிகப்பெரிய நகை விற்பனை பிராண்டாக முன்னணி வகிக்கும் டாடா குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க், உலகெங்கிலும் உள்ள கவர்ச்சிகரமான டிசைன்களால் ஈர்க்கப்பட்டு பிரத்தியேகமாக வடிவமைத்திருக்கும் அன்றாடம் அணிவதற்கு ஏற்ற நகைத்தொகுப்பாக ’க்ளாம்டேஸ்’ [‘GlamDays’]-ஐ அறிமுகம் செய்திருக்கிறது.

இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணின் ஆடை அலமாரியை மேலும் அதிக அர்த்தமுள்ள ஒன்றாக்குகிறது. பல்வேறு வடிவமைப்புகளில் அறிமுகமாகி இருக்கும் இந்த நகைத்தொகுப்புடன் கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், தனிஷ்க் தனது விற்பனை நிலையங்களில் என்னென்ன நகை மிகப்பொருத்தமாக இருக்கும் என்பதைப்பற்றிய புரிதலை வாடிக்கையாளர்களிடையே உருவாக்க உதவும் வகையில் சுவாரஸ்யமான, அர்த்தமுள்ள ஸ்டைலிங்கை அமர்வுகளையும் நடத்துகிறது.

ஸ்டைலிங் அமர்வுகள், வாடிக்கையாளர்களுக்கு மிகப்பொருத்தமான நகைகளைத் தேர்ந்தெடுக்க, தனிப்பயனாக்கப்பட்ட அனுபவத்தை வழங்கும் வகையில், அவர்களது ஆளுமைக்கும், பாணிக்கும் ஏற்ற வகையில் எந்தெந்த நகைகள் எப்படியிருக்கும் என்பது குறித்த ஸ்டைலிங் நிபுணர்களின் ஆலோசனை பெற உதவும். அதனால் வாடிக்கையாளர்கள் அன்றாட அணியும் தங்களது நகைகளிலும் இனி தனித்துவம் பெற முடியும்.

10,000-க்கும் மேற்பட்ட தனித்துவமான வடிவமைப்புகளில் இருந்து உங்களுக்கு மேலும் அழகு சேர்க்கும் நகைகளைத் தேர்ந்தெடுத்து அணிவதன் மூலம், இனி ஒவ்வொரு நாளும் நீங்கள் அசத்தலான புதிய தோற்றத்தில் #MakeEverydaySparkle என ஜொலிக்கலாம். அருமையான பல்வேறு உலகளாவிய வடிவமைப்புகளிலிருந்து உத்வேகத்தைப் பெற்று பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ‘க்ளாம்டேஸ்’ [GlamDays], காலை முதல் மாலை வரை அலங்கரிக்கும் உங்களது அன்றாட அழகை மறுவரையறை செய்வதோடு, தினமும் உங்களின் ஆளுமையை, பாணியை அழகியலுடன் வெளிப்படுத்துகிறது.

மென்மையான வசீகரத்தை வெளிப்படுத்தும் மலர்களின் வடிவமைப்பிலான் பதக்கங்கள், கவனத்தை ஈர்க்கும், புது அழகியலுடன் வடிவமைக்கப்பட்ட தங்க வளையங்கள், என்றென்றும் முடிவில்லா மோதிரங்கள் அல்லது புதுப்பாணியிலான ப்ரேஸ்லெட்கள் என எதுவாக இருந்தாலும், ’க்ளாம்டேஸ்’ [GlamDays] சமகால நகைகளின் பல்வேறு வடிவமைப்புகளில் தங்கம் மற்றும் வைர நகைகளை வழங்குகிறது.

இந்த நகைகள் இனி ஒவ்வொரு நாளும் காலை முதல் மாலை வரை கவர்ச்சிகரமான தோற்றப் பொலிவுக்கான அழகை வெகு எளிதில் பெற செய்கிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்க, அவர்கள் தனிஷ்க்கில் வாங்கும், தங்க நகைகளின் செய்கூலியில் 20%* வரை தள்ளுபடி சலுகையையும், வைர நகைகளின் மதிப்பில் 20%* வரை தள்ளுபடியையும் வழங்குகிறது. [Up to 20%* off on Making Charges of Gold jewellery and on Diamond Jewellery Value].

மேலும் கூடுதலாக, வாடிக்கையாளர்கள் தனிஷ்க்கின் ‘கோல்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டம்’ [‘Gold Exchange Program’]-ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் வாடிக்கையாளர்கள் இந்தியாவில் உள்ள எந்த நகைக்கடைக்காரரிடமிருந்தும் வாங்கப்பட்ட தங்களது பழைய தங்கத்தின் மீது 100%* வரை பரிமாற்ற மதிப்பைப் [upto 100%* exchange value on old gold purchased from any jeweller in India] பெறலாம். அதிகரித்து வரும் தங்க விலைகளுடன், தனிஷ்க் தங்க விலை பாதுகாப்பையும்* [Gold Rate Protection*] வழங்குகிறது.

இந்த தங்க விலை பாதுகாப்பு அம்சம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தங்க நகைகளை முன் பதிவு செய்ய அனுமதிக்கிறது. மேலும் அதிகரிக்கும் தங்கத்தின் விலைக்கு எதிரான பாதுகாப்பையும் அளிக்கிறது. இந்த சிறப்பு சலுகை குறிப்பிட்ட காலம்* வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த நகைத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு நகையும் 18 காரட் மற்றும் 22 காரட் தங்கத்தில் செய்யப்பட்டிருப்பதோடு, இன்றைய நவநாகரீக பெண்களின் மாறிவரும் வாழ்க்கை முறைகளின் எதிர்பார்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு விதமான நகைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இருந்து ஈர்க்கப்பட்ட விதவிதமான வடிவமைப்புகள் மற்றும் பல்வேறு நவீன நுட்பங்களைப் பயன்படுத்தி இருப்பதன் மூலம், ’க்ளாம்டேஸ்’ நகைத்தொகுப்பு உங்களது ஒவ்வொரு தோற்றத்திற்கும் பொருந்துகிற பலவிதமான துணையாக இருக்கும் வகையில் தனித்துவமான வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகவும் நேர்த்தியான உங்களது தொழில்ரீதியான தோற்றமாக இருந்தாலும் சரி, குடும்ப இரவு உணவு சந்திப்பாக இருந்தாலும் சரி அல்லது வீட்டில் ஓய்வாக இருக்கும் நாளாக இருந்தாலும் சரி, நீங்கள் அதிகம் மெனக்கெடாமலேயே அழகுடன் ஜொலிக்கலாம். ’க்ளாம்டேஸ்’ நகைத்தொகுப்பு, உங்களது ஆளுமையை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தவும், உங்களது தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும் பிரத்தியேகமான நகையை வடிவமைக்கப்பட வேண்டுமென தனிஷ்க் கொண்டிருக்கும் அக்கறையை வெளிப்படுத்தும் வகையில் அறிமுகமாகி இருக்கிறது.

எதைத் தேர்வு செய்வது எதை விடுப்பது என்ற யோசனையை உருவாக்கும் வகையில் பல்வேறு விதவிதமான ஸ்டைல்களுடன் அறிமுகமாகி இருக்கும் ‘க்ளாம்டேஸ்’ நகைத்தொகுப்பில், பல்வேறு வகையான நெக்லஸ்கள், காதணிகள், வளையல்கள் மற்றும் மோதிரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நகைகள் ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களின் தனித்துவமான விருப்பங்கள் மற்றும் தினமும் அவர்கள் அணியும் உடைகள், ஸ்டைலிங் ஆகியவற்றுக்கு ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட தோற்றத்தை வழங்குகின்றன.

உங்கள் அன்றாட பாணி மற்றும் #MakeEverydaySparkle ஆகியவற்றை நிறைவுசெய்ய சரியான நகைகளை ‘க்ளாம்டேஸ்’ தொகுப்பில் இருந்து தேர்ந்தெடுக்கவும். ‘க்ளாம்டேஸ்’ இப்போது அனைத்து தனிஷ்க் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *