தமிழ் செய்திகள்

அனைத்துலக வள்ளலார் மாநாட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உலக சர்வதேவ சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் பாராட்டு

சென்னை: உலக சர்வதேவ சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிர்வாகிகள், நிறுவனர் சண்முக மூர்த்தி லெட்சுமணன் தலைமையில், மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க சித்த வேத பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரும் சங்க நிறுவனர்ுமான சண்முக மூர்த்தி லெட்சுமணன், உலகில் இல்லாத வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.

வள்ளலார் 200ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, ரூ.100 கோடி நிதி ஒதுக்கி பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவது பாராட்டத்தக்கது என்றும் தெரிவித்தார். மேலும், உலகின் பல நாடுகளில் இருந்து வந்த நிர்வாகிகளை கௌரவித்து “அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை” விருதுகள் வழங்கப்பட்டதாக கூறினார்.

வள்ளலாரின் கருணைச் சிந்தனையை உலகளவில் பரப்ப, ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் பெற தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்றும், அதற்கு சங்கம் முழுமையாக துணைநிற்கும் என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் துபாய் சிறப்பு கல்வி மற்றும் மருத்துவ பங்களிப்பாளர் பிரமிளா சந்திரசேகரன், பிரான்ஸ் நாட்டின் உறுப்பினர் ஆல்பிரட் அறிவழகன், இந்தியா மற்றும் அமெரிக்கா ஆலோசகர் பவள்மலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *