General

உலக சாதனை படைத்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மார்பக புற்றுநோய் குறித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக Mother India’s Crochet Queens (MICQ) என்னும் நிறுவனம் வித்தியாசமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள SRM கல்லூரியில் உலக புற்றுநோய் நாளையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Mother India’s Crochet Queens (MICQ) சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பெண்களிடத்தில் ஏற்படுத்தும் விதமாகவும், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கும் 4517 கழுத்தில் அணியும் வண்ணவண்ண (scarf) ஸ்கார்ப்-கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்ற அளவில் ஸ்கார்ப்-களை தயார் செய்து கொடுத்தனர்.

4517 ஸ்கார்ப்-கள் ஒரே இடத்தில் காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் உலக சாதனை நிகழ்வாக கருதி இந்த நிகழ்ச்சியை கின்னஸ் ரெக்கார்ட் நிறுவனம் அங்கீகரித்து சான்றளித்துள்ளது.

Mother India’s Crochet Queens (MICQ) என்கிற நிறுவனம் இதற்கு முன்னர் இதுபோன்ற மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நான்கு முறை உலக சாதனைக்கான கின்னஸ் அங்கீகாரம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது தயார் செய்யப்பட்டுள்ள 4517 ஸ்கார்ப்-கள் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வழங்கப்படவுள்ளதாக Mother India’s Crochet Queens (MICQ) நிறுவன தலைவர் சுபஸ்ரீ தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *