விளக்குகளை கொண்டு இந்திய வரைபடத்தை உருவாக்கி தீபாவளி கொண்டாட்டம்
சென்னை: தீபாவளி இந்திய மக்களால் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். தீபாவளியையொட்டி அனைவரையும் உற்சாகத்துபடுத்தும் வகையில் சென்னையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி தீபங்கள் மூலம் இந்திய வரைபடத்தை உருவாக்கி அனைத்து பார்வையாளர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை ‘ஒரே தீபம் ஒரே பாரம்பரியம்’ முன்முயற்சி திட்டத்தில் கவின்கேர் நிறுவனத்தின் பிராண்டான மீரா ஏற்பாடு செய்திருந்தது.
சென்னை அண்ணாநகர் டவர் பூங்காவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 1000 பேர் பங்கேற்று தீபங்களை ஏற்றி இந்திய வரைபடத்தை உருவாக்கினார்கள்.
“ஒரே தீபம் ஒரே பாரம்பரியம்” என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், மற்ற பழக்கவழக்கங்கள் காலப்போக்கில் மக்களிடையே மாறுபட்டு இருந்தாலும், நாட்டை ஒன்றிணைக்கும் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியை தீப ஒளியுடன் கொண்டாடுவதை வலியுறுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியை மீரா நடத்தியது. மொழி, இன, மாநில வேறுபாடுகளை கடந்து கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் நடந்த இந்த தீப ஒளி நிகழ்ச்சியானது அனைத்து மக்களை ஒன்றிணைத்து அனைவரிடத்திலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகையில் ஒவ்வொருவரும் உடுத்தும் உடையில் இருந்து உணவு வரை மாற்றங்கள் இருந்தபோதிலும், தீபம் ஏற்றுவது மட்டும் அன்று முதல் இன்று வரை மாறாமல் உள்ளது. இது இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில் ஒற்றுமையின் பிரகாசத்தைக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பேர் பங்கேற்று, நாட்டின் ஒற்றுமை மற்றும் வளமான கலாச்சார பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அற்புதமான ஒளிரும் இந்திய வரைபடத்தை உருவாக்கினர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கவின்கேர் நிறுவனத்தின் பர்சனல் கேர் – பிசினஸ் ஹெட் ரஜத் நந்தா கூறுகையில், ஒரு பிராண்டாக, மீரா எப்போதும் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது. மரபுகளை நம் வாழ்வில் அர்த்தமுள்ளதாக பார்த்து வரும் நாம் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். நமது முடி பராமரிப்பு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் பாரம்பரிய மூலப்பொருட்களின் பலன்களைக் கொண்டு வரும்போது இந்த நம்பிக்கை மேலும் ஒளிர்கிறது, வாழ்க்கையில், தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும் தீபங்களை ஏற்றி பழக்கவழக்கங்களை மதித்து தீபாவளியை பண்டிகையை கொண்டாடுகிறோம் என்று தெரிவித்தார்.
மேலும், இதில் பங்கேற்றவர்கள் ஏற்றிய தீபம் ஒவ்வொன்றும் நம் நாட்டின் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. நாம் ஒவ்வொருவரும் எங்கிருந்து வந்தாலும், நாம் அனைவரும் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தால் இணைந்துள்ளோம் என்பதை இந்த நிகழ்ச்சி நமக்கு நினைவூட்டுகிறது. இது மிகவும் அற்புதமாக இருந்ததோடு, சமூகத்தின் உணர்வையும், நம்மை உண்மையாக ஒன்றுபடுத்துவதை கொண்டாடுவதற்கான நமது கூட்டு அர்ப்பணிப்பையும் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. இந்த நிகழ்ச்சியானது உண்மையிலேயே மனதிற்கு இதம் அளிக்கும் உற்சாகத்தை தரும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது என்று தெரிவித்தார்.