சசிகுமார் – சிம்ரன் கூட்டணியில் கலகலப்பான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாகவும் மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தக்க வைத்த நடிகை சிம்ரன் முதன்மையான கதாபாத்திரத்தில் ஆகியோர் நடித்திருக்கும் புதிய படத்திற்கு ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என பெயரிடப்பட்டு, அதற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்-மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் பிரத்யேக டீஸர் வெளியிடப்பட்டிருக்கிறது.
டீசரில் ஊரை விட்டு யாருக்கும் குறிப்பாக வீட்டின் உரிமையாளருக்கே தெரியாமல் நடு இரவில் வீட்டை விட்டு வெளியேற முயலும் சசிகுமாரின் குடும்பத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களால் நடக்கும் சம்பவங்களை கலகலப்பாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
சசிகுமார் முதன்முதலாக கலகலப்பான திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு பிரேமிலும் குடும்ப உறுப்பினர்கள் அவரை சோதனைக்குள்ளாக்குவது நமக்கு அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்குகிறது.