சொத்து கலவையில் அதிகரித்து வரும் பன்முகத்தன்மை காப்பு பெற்ற திட்டங்களின் வலுவான பங்களிப்பு; 9MFY25-ல் NIM 9.0%-ஆக பதிவு
முந்தைய ஆண்டைவிட 10% வளர்ச்சியுடன் மொத்த கடன் புத்தகம் ₹30,466 கோடியாக உயர்வு;
செப்டம்பர் 24-ல் 35% என்பதிலிருந்து 39%-ஆக பாதுகாக்கப்பட்ட பதிவேடு முன்னேற்றம் கண்டிருக்கிறது;
இக்காலாண்டிற்கான GNPA / NNPA முறையே 2.7% / 0.6% என பதிவு; PCR 80%-ஆக இருக்கிறது
முந்தைய ஆண்டைவிட 16% வளர்ச்சியுடன் டெபாசிட்கள் ₹ 34,494 கோடியாக பதிவு; YoY அடிப்படையில் CASA 15% உயர்வு; CASA விகிதம் 25%-ஆக இருக்கிறது
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க் லிமிடெட் [BSE: 542904; NSE: UJJIVANSFB], 2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டிற்கான அதன் நிதிசார் செயல்பாடுகளை இன்று அறிவித்திருக்கிறது.
Q3FY25-ல் உஜ்ஜீவன் வங்கியின் பிசினஸ் செயல்பாடுகளின் தொகுப்பு அறிக்கை
சொத்துக்கள்
மொத்த கடன்கள், முந்தைய ஆண்டைவிட 9.8%/முந்தைய காலாண்டைவிட 0.4% உயர்ந்து ₹ 30,466* கோடியாக இருக்கிறது
பாதுகாக்கப்பட்ட கடன் பதிவேடு டிசம்பர் 24-ல் 39.3%-ஆக பதிவு. இதுவே டிசம்பர் 23-ல் 28.3%-ஆகவும், செப்டம்பர் 24-ல் 34.9%-ஆகவும் இருந்தது.
பாதுகாக்கப்பட்ட கடன் பதிவேடு QoQ அடிப்படையில் 13.3% மற்றும் YoY அடிப்படையில் 52.0% உயர்வு
கடன் வசூல் மற்றும் சொத்து தரம்
டிசம்பர் 24-ல் ஒட்டுமொத்த கடன் வசூல் திறன் ~96% ஆக இருக்கிறது.
டிசம்பர் 24-ல் குழு மற்றும் தனிநபர் கடன் புத்தகத்தின் பக்கெட் X வசூல் திறனானது 99.3% என முன்னேற்றம் கண்டிருக்கிறது.
இடர்வாய்ப்பிலுள்ள கடன்கள்/ GNPA/NNPA* ஆகியவை முறையே 5.4%/2.7%/0.6% என டிசம்பர் 24-ல் பதிவாகியிருக்கின்றன. இதுவே செப்டம்பர் 24-ல் முறையே 5.1%/ 2.5%/ 0.6% என இருந்தது. Q3FY25-ல் ₹ 30 கோடி ரூபாய் வராக் கடனாக தள்ளுபடி செய்யப்பட்டது.
Q3-ல் ₹ 30 கோடி என்ற தொகை துரிதமாக்கப்பட்ட ஒதுக்கீடாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வராக் கடனுக்கான கவரேஜ் விகிதம் டிசம்பர் 24-ல் 80%# ஆக இருக்கிறது.
டெபாசிட்கள்
டிசம்பர் 24-ல் ₹ 34,494 கோடியாக டெபாசிட்கள் இருந்தன. YoY மற்றும் QoQ அடிப்படையில் முறையே 16.3% மற்றும் 1.2% வளர்ச்சியாக இது இருக்கிறது.
YoY அடிப்படையில் 15% வளர்ச்சியுடன் CASA ₹ 8,662 கோடியாகவும், CASA விகிதம் டிசம்பர் 24-ல் 25.1%-ஆகவும் பதிவாகியிருக்கிறது.
ரீடெய்ல் டெர்ம் டெபாசிட்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. YoY மற்றும் QoQ அடிப்படையில் இது முறையே 29.5% / 4.4% வளர்ச்சியாகும்.
நிதிசார் அம்சங்கள்
YoY அடிப்படையில் 3.1% வளர்ச்சியுடன் Q3FY25 NII – ₹ 887 கோடி; Q3FY25-ல் 8.6%-ஆக NIM பதிவு
Q2FY25-ல் 6.4%-ஆக இருந்த சராசரி சொத்துகளுக்கான இயக்கச் செலவுகள் Q3FY25-ல் 6.2%-ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது.
Q3FY25-ல் PPoP ₹ 359 கோடியாக பதிவு; Q3FY25-ல் சரிக்கட்டப்பட்ட$ வருவாய்க்கு பிந்தைய இலாபம் (PAT) ₹ 132 கோடியாக பதிவு
Q3FY25 சரிக்கட்டப்பட்ட$ RoA / RoE முறையே 1.2% / 8.8% – ஆக இருக்கிறது
மூலதனம் மற்றும் நீர்மைத் தன்மை (லிக்விடிட்டி)
மூலதன போதுமான விகிதம் 23.9% – ஆக பதிவு
டிசம்பர் 24-க்கான தற்காலிக தினசரி சராசரி LCR, 130.4% – ஆக இருக்கிறது
உஜ்ஜீவன் ஸ்மால் பைனான்ஸ் பேங்க்-ன் நிர்வாக இயக்குநர் & தலைமை செயலாக்க அதிகாரி சஞ்சீவ் நௌடியல் கூறியதாவது: “Q3FY25 ஒரு ஆரோக்கியமான காலாண்டாக இருந்தது. இதில் கடன் பதிவேட்டின் பன்முகத்தன்மையானது நிலையான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. அதிக பாதுகாப்பான கடன் பதிவேடு என்ற இலக்கை நோக்கிய எமது உத்தியானது QoQ அடிப்படையில் 13% மற்றும் YoY அடிப்படையில் 52% என்ற வளர்ச்சியுடன் மொத்த சொத்து கடனுக்கு 39% பங்களிப்பை வழங்கி துரிதமாக்கப்பட்ட முடிவுகளை தந்திருக்கிறது. கடன் புத்தகமானது, QoQ அடிப்படையில் 0.4% மற்றும் YoY அடிப்படையில் 10% உயர்ந்து ₹ 30,466 கோடி என்பதை எட்டுவதற்கு இம்முயற்சிகள் உதவியிருக்கின்றன.
பொறுப்புள்ள ஒரு கடன் வழங்கல் நிறுவனமாக திகழும் இவ்வங்கி குழு கடன்களிலும் (GL) மற்றும் தனிநபர் கடன்களிலும் (IL) வட்டி விகிதங்களை குறைக்கிற ஒரு தன்முனைப்பு முடிவை எடுத்திருக்கிறது. 2025 ஜனவரி 01-ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த குறைக்கப்பட்ட வட்டி விகிதங்களில் கடன்கள் வழங்கப்படும். தரமான வாடிக்கையாளர்களை பெறுவதற்கு ஒரு ஏதுவாக்கும் அம்சமாக இது செயல்படும். இதே நேரத்தில் மாற்றம் கண்டு வரும் முன் நிதி செயல்தளத்தையும் நாங்கள் நெருக்கமாக கண்காணித்து வருகிறோம் மற்றும் பொருத்தமான விதத்தில் அதனை நாங்கள் கையாண்டு வருகிறோம். இதற்கு முன்னதாக அழுத்தத்திற்கு ஆளான சில அம்சங்கள் இப்போது ஆரோக்கியமான போக்குகளை வெளிப்படுத்தி வருகின்றன. குழு கடன்கள் மற்றும் தனிநபர் கடன்களில் X-பக்கெட் வசூல் திறனானது டிசம்பர் 24-ல் 99.3%-ஆக முன்னேற்றம் கண்டிருக்கிறது. இதுவே ஆகஸ்ட் 24-ல் 99.0%-ஆக இருந்தது. புதிய பிசினஸ் செயல்பாடுகளின் காரணமாக Q4FY25-ன் முதல் 3 வாரங்களின்போது மிக அதிக கடன் விநியோகத்தை நாங்கள் கண்டிருக்கிறோம். பல்வேறு மாநிலங்களில் சூழ்நிலையானது இயல்பு நிலையை நோக்கி மாறிவருகின்ற நிலையில் ஆரோக்கியமான பிசினஸை பெறுவது என்ற குறிக்கோளை எதிர்கொள்ள நாங்கள் முழுமையாக தயார் நிலையில் இருக்கிறோம். பாதுகாக்கப்பட்ட பிசினஸ்கள் நிலையான மற்றும் உறுதியான முன்னேற்றத்தை கண்டு வருகின்றன. இந்தாண்டு ~40% YTD வளர்ச்சியை இது பதிவு செய்திருக்கிறது மற்றும் FY25-ன் முழு ஆண்டிலும் இன்னும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து தரத்தை இன்னும் சிறப்பாக நிர்வகிப்பதற்காக ₹ 270 கோடி மதிப்புள்ள அழுத்தத்திற்கு ஆளான கடன் சொத்துகளை விற்பனை செய்யும் பணியிலும் இவ்வங்கி ஈடுபட்டிருக்கிறது. எதிர்காலத்தில் எழக்கூடிய எந்தவொரு எதிர்பாரா நிலைகளை எதிர்கொள்ள பாதுகாப்புடன் இருப்பதற்கு ₹ 30 கோடி ரூபாய் என்ற ஒதுக்கீட்டு ஏற்பாட்டையும் வங்கி மேற்கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு டிசம்பர் 24 முடிவில் வங்கியின் GNPA/NNPA என்பது முறையே 2.7% மற்றும் 0.6% என்ற அளவில் 80% PCR என்ற சௌகரியமான நிலையிலிருக்கிறது.
டிசம்பர் 24 இறுதியில் மொத்த டெபாசிட்கள் ₹ 34,494 கோடியாக, QoQ அடிப்படையில் 1.2% மற்றும் YoY அடிப்படையில் 16.3% என்ற வளர்ச்சியினை பதிவு செய்திருக்கிறது. CASA விகிதமானது தொடர்ந்து ஆரோக்கியமான நிலையில் 25.1% எனப் பதிவாகியிருக்கிறது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், பெருநிறுவனங்களில் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் என்பவற்றின் கீழ் பெரும்பாலும் வகைப்படுத்தப்படும் வசதியான வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு சேவையாற்ற சிறப்பு கவனம் செலுத்தும் உத்தியை இவ்வங்கி பயன்படுத்தி வருகிறது. AD-1 உரிமம் கிடைக்கப் பெற்றதற்கு பிறகு எமது திட்டங்களின் தொகுப்பில் இணைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்களும், எமது சேவைகளை மேலும் மேம்படுத்தும்; மேலே குறிப்பிடப்பட்ட உத்திக்கு இணக்கமாக சேவை வழங்கப்படும் வாடிக்கையாளர்களின் அடித்தளத்தை இது உயர்த்தும்.
இறுதியாக இன்று நடைபெற்ற கூட்டத்தில் இயக்குநர்கள் குழுவின் ஒப்புதலை பெற்றிருக்கும் நிலையில், யுனிவர்சல் வங்கி என்ற உயர்நிலைக்கு மாறுவதற்காக இந்திய ரிசர்வ் வங்கிக்கு விரைவில் நாங்கள் விண்ணப்பிக்க இருக்கிறோம் என்ற செய்தியினை பகிர்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”