DEVOTIONAL

நாகூர் ஆண்டவர் கந்தூரி விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்காவில் 467 ஆவது கந்தூரி விழா துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று (டிசம்பர் 23) இரவு சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது.

இதில் கலந்துகொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு வந்தடைந்தார்.

அங்கு அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

தர்காவில் பிரார்த்தனையில் ஈடுபட்ட பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் 467 ஆவது கந்தூரி விழாவில் பங்கேற்றது தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

அத்தோடு, புனிதரின் ஆசிர்வாதத்தினை பெற்றதில் மகிழ்ச்சி கொள்வதாகவும், பாரதத்தின் கலாச்சாரத்தினை நாகூர் தர்கா பிரதிபலிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநரின் வருகைக்கு நாகை மாவட்டத்தில் விசிக, காங்கிரஸ், கம்ம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கருப்பு கொடியேந்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *