இளம்தலைமுறைக்கான ஸ்விஸ் பியூட்டி நிறுவனத்தின் புது அறிமுகம்
சென்னை : இந்தியாவின் முன்னணி ஒப்பனை பிராண்டுகளில் ஒன்றான ஸ்விஸ் பியூட்டி, இளம்தலைமுறைக்கான அதன் ஒப்பனை சேகரிப்பு கிரேஸ்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பல பணிகளில் ஒரே நேரத்தில் ஈடுபடும் அடுத்த தலைமுறை மக்களுக்கான, பல்துறை சார்ந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அவர்களின் மிகவும் உயிர்ப்புள்ள ஒப்பனை தேவைகள் ஆகியவை இதில் அடங்கும்.
அதன் நவநாகரீக பேக்கேஜிங் மற்றும் சூத்திரங்கள், இளம்தலைமுறையின் பேச்சு முறைகளில் அமைந்த தயாரிப்பு பெயர்கள் மற்றும் பலவகைத் தயாரிப்புகளின் மூலம் கிரேஸ் இளைஞர்களின் ஆர்வத்தையும் சுய வெளிப்பாட்டையும் கொண்டாடுகிறது. இது முகம், உதடுகள் மற்றும் கண்களுக்கு வண்ணங்களின் அடர் தட்டுகள் மற்றும் புதுமையான ஒப்பனை சூத்திரங்களை வழங்குகிறது.
பல பரிமாண அத்தியாவசிய அழகு பொருட்கள் முதல் துடிப்பான மற்றும் வெளிப்படையான அழகுசாதனப் பொருட்கள் வரை, மிகவும் சுறுசுறுப்பான வாழ்க்கையை வாழ்வோர் மற்றும் தங்கள் தோற்றத்தின் மூலம் உலகிற்கு செய்தியினைச் சொல்ல விரும்புவோருக்கு ஸ்விஸ் பியூட்டியின் க்ரேஸ் இறுதித் துணையாகும்.
ஸ்விஸ் பியூட்டியின், தலைமைச் செயல் அலுவலர், திரு. சாஹில் நாயர் அவர்கள் கூறுகையில், “எங்கள் கிரேஸ் ஒப்பனை வரிசையானது, உலகில் எங்கும் தங்கள் முத்திரையை பதிக்கும் துடிப்பான மற்றும் ஆற்றல்மிக்க இளம் தலைமுறையினர், அவர்கள் கல்லூரியில் அடியெடுத்து வைத்தாலும், பட்டப்படிப்பை முடித்தாலும் அல்லது பணியிடத்தில் நுழைந்தாலும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.