General

மாணவர்கள் பஸ் படியில் தொங்குவதை தவிர்க்க புதிய ஐடியா

தமிழக முழுவதும் பள்ளி மாணவர்கள் குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்று முன்னேறும் வகையில் அவர்களுக்கு இலவச பயண பேருந்து அட்டை அளித்து கல்வி கற்க தமிழக அரசு வழிவகை செய்து வருகிறது.

இதனை சற்றும் உணராமல் பள்ளி மாணவர்கள் விளையாட்டுத்தனமாக பேருந்து படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உடல் உறுப்புகளையும் , சில சமயம் உயிரிழப்பையும் சந்திக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் இது போன்ற பயண நேரத்தில் விபத்துக்களை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காஞ்சிபுரம் பணிமனையில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளின் படிக்கட்டுகளில் இரு பகுதிகளிலும் தகரம் அடைத்து மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் தற்போது காஞ்சிபுரம் வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

இதற்கு அனைத்து தரப்பு பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்ததால் காஞ்சிபுரம் பணிமணியின் கீழ் செயல்படும் அனைத்து நகர பேருந்துகளிலும் இதுபோன்ற தகரம் பொருத்தும் பணியில் தொழிற்பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

படியில் ஏறி உள்ளே செல்லும் வகையில் மட்டுமே இனி இருக்கும் என்பதால் விபத்துக்கள் குறையும் என்பதும், இதன் பிறகு மாணவர்கள் தங்கள் உயிரின் மதிப்பை அறிந்து படிக்கட்டு பயணத்தை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமாக உள்ளது.

போக்குவரத்து துறையின் இந்த ஐடியா பலன் தருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *