கோட் சூட்டில் முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்
சென்னை: தமிழகத்தின் முதல்வராக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
“சி.ஜோசப் விஜய் என்னும் நான்” என்று தனது பெயரை கூறி அவர் பதவி பிரமாணம் வாசித்தார். அவருடன் சேர்த்து வெற்றி பெற்ற ஒன்பது பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
வழக்கமாக இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளில் பங்குபெறுவோர் வேட்டி, சட்டை அணிந்து வருவதே வழக்கமாக இருந்து வந்த நிலையில், முதல்வராக பதவியேற்ற விஜய் கோட் சூட்டில் வந்திருந்தார்.

