டைட்டன் வேர்ல்ட் நிறுவனத்தின் இதயப்பூர்வமான அன்னையர் தின விளம்பர பிரச்சார இயக்கம், நேரத்தின் அருமையையும் தாய் அன்பையும் கொண்டாடுகிறது!
மனம் கவர் பரிசுகளுடன், விற்பனை நிலையத்திற்குள் ஆச்சர்யப்படுத்த்தும் வகையிலான சிறப்பு கொண்டாட்டத்துடன் வாடிக்கையாளர்களை உற்சாகத்தில் திளைக்க செய்கிறது
சென்னை: இந்தியாவின் மிகப் பெரிய கடிகார சில்லறை விற்பனை நிறுவனமான டைட்டன் வேர்ல்ட், உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண்ணான உங்கள் தாய்க்குப் பரிசளிப்பதற்கான ஒரு புதுமையான அனுபவத்தை வழங்குகிறது. தாயுடன் நேரத்தை செலவிடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலான அன்னையர் தின விளம்பரப் பிரச்சாரத்தை வெளியிடுவதில் டைட்டன் வேர்ல்ட் மகிழ்ச்சியடைகிறது. இந்த விளம்பரப் பிரச்சாரம் ஒரு மகனுக்கும் அவரது தாய்க்கும் இடையிலான ஆழமான பிணைப்பின் அழகான அம்சத்தை எடுத்துரைப்பதை மையமாகக் கொண்டுள்ளது. இந்த விளம்பரம், டைட்டன் வேர்ல்ட் விற்பனை நிலையத்தில் தாயாருக்கு, ஒரு ஆச்சர்யமூட்டும் கொண்டாட்ட உற்சாகத்துடன் நிறைவடைகிறது. தங்கள் குடும்பங்களை முன்னேற்றுவதற்கும் பராமரிப்பதற்கும் தன்னலமின்றி தங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும் தாய் என்ற பெண்ணைப் பாராட்டும் வகையில் இது அமைந்துள்ளது. தாய் அன்பையும் உங்கள் தாயுடன் நீங்கள் செலவழித்த ஒவ்வொரு தருணத்தின் மதிப்பையும் இந்த விளம்பரப் படம் எடுத்துக்காட்டுகிறது.
இந்த அன்னையர் தினத்தில், டைட்டன் வேர்ல்ட் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள், தங்கள் தாய்மார்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கும் வாய்ப்பை வழங்குகிறது. விற்பனை நிலையத்தில் ஆச்சரியத்துடன் கூடிய மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் நிறைந்த ஒரு நாளாக அது இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட டைட்டன் வேர்ல்ட் விற்பனை நிலையங்கள் இந்த உற்சாகமான கொண்டாட்டத்திற்காக மேலும் பொலிவூட்டப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியின் புகலிடமாக மாற்றப்படும். இந்த அனுபவத்தை ஒரு படி மேலே எடுத்துச் செல்லும் வகையில், வாடிக்கையாளர்கள் ஒரு விரைவு கை ஓவியம் வரையும் நடவடிக்கையிலும் ஈடுபடலாம். இந்த நிகழ்வு அவர்களின் தனித்துவமான பிணைப்பின் அடையாளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அனுபவம் உண்மையிலேயே மறக்கமுடியாத கொண்டாட்டத்தை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மார்களும் குடும்பத்தினரும் அன்பைப் பொழிந்து பாராட்டை வழங்கும் தருணங்களை போற்றிக் கொண்டாடுவதற்கு இது வகை செய்கிறது.
இந்த நிகழ்ச்சி குறித்து, டைட்டன் வாட்ச்சஸ் நிறுவன துணைத் தலைவரும் தலைமை விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரியுமான திரு ராகுல் சுக்லா (Rahul Shukla, Vice President and Chief Sales & Marketing Officer – Titan Watches) கூறுகையில், “உடனடி மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தை விரும்பும் இந்த யுகத்தில், டைட்டன் வேர்ல்ட் நிறுவனத்தில் நாங்கள் ஒரு இயக்கத்தை அறிமுகப்படுத்துகிறோம். இது, நம் ஒவ்வொருக்காகவும், தங்களது முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்த பெண்ணாக திகழும் தாயுடன் நல்ல முறையில் நேரத்தை செலவிடுவதாக அமைகிறது. இந்த நாள் உங்கள் தாய்க்கும் உங்களுக்கும் மறக்கமுடியாத தருணங்களைக் கொண்டதாக அமைவதை உறுதிசெய்ய, ஒரு தனித்துவமான, விற்பனை நிலைய அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அன்றைய தினத்தின் உச்சமாக, டைட்டனில் உள்ள பல்வேறு வகைகளில் பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து உங்களுக்கு விருப்பமானவற்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.
சென்னையில் அம்பத்தூர், அசோக் நகர், வளசரவாக்கம், ராயபுரம் மற்றும் பெரம்பூர் விற்பனை நிலையங்களில் வாடிக்கையாளர்கள் இந்த விற்பனை நிலைய கொண்டாட்டங்களில் பங்கேற்று மகிழ்ச்சியை அனுபவிக்கலாம். mothersday@titan.co.in என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அதன் மூலம் உங்கள் அன்னையர் தினத்தை மேலும் மகிழ்ச்சியானதாக்கி, டைட்டன் வேர்ல்ட் நிறுவனத்துடன் இணைந்து சிறப்பான கொண்டாட்டத்தை உருவாக்குங்கள்.
விளம்பரப் பிரச்சார வீடியோ இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை இந்த யூடியூப் இணைப்பில் காணலாம்: https://youtu.be/jQwZxa0ywbE?si=sQIaXA7od-fm0QSt