புதிய ரக குளிர்விப்பு சாதனங்கள் அறிமுகம்: வளர்ச்சியை நோக்கி புளூ ஸ்டார் நிறுவனம்
சென்னை: குளிர்விப்பு சாதன உற்பத்தியில் முன்னணி நிறுவனமான புளூ ஸ்டார் லிமிடெட் (Blue Star Limited), 2026 கோடைக்காலத்திற்காக புதிய ரக அறை ஏசி (Room Air Conditioners) தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் குடியிருப்பு மற்றும் வணிக ரீதியான குளிர்விப்பு சந்தையில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய தயாரிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய தயாரிப்பு வரிசையில் மொத்தம் 125 மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதில் இன்வெர்ட்டர், பிக்ஸ்ட் ஸ்பீட் மற்றும் விண்டோ ஏசிகள் போன்ற பல்வேறு வகைகள் அடங்குகின்றன. மேலும், அனைத்து மாடல்களும் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்த புதிய எரிசக்தி திறன் பணியகத்தின் (BEE) தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் வீடுகளுக்கான ஏசி பயன்பாடு கடந்த சில ஆண்டுகளில் வேகமாக உயர்ந்து வருகிறது. அதிகரித்து வரும் வருமானம், நகரமயமாக்கல் மற்றும் கடும் வெப்பநிலை போன்ற காரணங்களால் இந்த துறை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருகிறது. தற்போது ஆண்டுக்கு சுமார் 14 மில்லியன் யூனிட்டுகள் விற்பனையாகும் நிலையில், 2030க்குள் இது 30 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டயர்–3, 4 மற்றும் 5 நகரங்களில் ஏசி பயன்பாடு வேகமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
புளூ ஸ்டார் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு வரிசையில் ‘ஐகோனியா’ (Iconia) என்ற பிரீமியம் ஏசி மாடல் ‘மிட்நைட் சில்வர்’ நிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘சூப்பர் எனர்ஜி-எஃபிஷியன்ட்’, ‘ஹெவி-டியூட்டி’, ‘ஹாட் & கோல்ட்’ மற்றும் ‘ஆன்டி-வைரஸ் தொழில்நுட்பம்’ கொண்ட பல புதிய மாடல்களையும் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சூப்பர் எனர்ஜி-எஃபிஷியன்ட் ஏசிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘டைனமிக் டிரைவ்’ தொழில்நுட்பம் குறைந்த மின்சாரத்தில் அதிக குளிர்வை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1TR இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசிகள் 6.25 என்ற ISEER மதிப்பை பெற்றுள்ளன. இது சாதாரண 3-ஸ்டார் இன்வெர்ட்டர் ஏசிகளை விட சுமார் 45 சதவீதம் அதிக எரிசக்தி திறன் கொண்டதாகும்.
ஹெவி-டியூட்டி ஏசிகள் 56 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தாலும் சிறப்பாக குளிர்விக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இவை 55 அடி தூரம் வரை காற்றை வீசும் திறன் கொண்டவை. அதேபோல் ‘ஹாட் & கோல்ட்’ ஏசிகள் -15 டிகிரி செல்சியஸ் வரை குறைந்த வெப்பநிலையிலும் இயங்கக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் சில மாடல்களில் ஆன்டி-வைரஸ் தொழில்நுட்பம், மல்டி-லேயர் வடிகட்டுதல், செல்ஃப்-கிளீன் வசதி மற்றும் துருப்பிடிப்பைத் தடுக்கும் ‘நேனோ புளூ புரோடெக்ட்’ தொழில்நுட்பம் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் சுமார் 50 மாடல்கள் ஸ்மார்ட் வைஃபை வசதியுடன், AI அடிப்படையிலான அடாப்டிவ் கூலிங் மற்றும் குரல் கட்டுப்பாடு போன்ற வசதிகளையும் கொண்டுள்ளன.
புதிய தயாரிப்புகளுக்காக இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு வாழ்நாள் உத்தரவாதமும், PCB-களுக்கு 5 ஆண்டு உத்தரவாதமும் வழங்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொண்டு புளூ ஸ்டார் நிறுவனம் தனது உற்பத்தித் திறனையும் விரிவுபடுத்தியுள்ளது. தற்போது ஆண்டுக்கு 1.4 மில்லியன் யூனிட்டுகளாக உள்ள உற்பத்தித் திறன் விரைவில் 1.8 மில்லியன் யூனிட்டுகளாக உயர்த்தப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சிட்டி மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளில் ஏசி உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் புளூ ஸ்டார் நிறுவனம் 900 நகரங்களில் 10,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களுடன் வலுவான விநியோக வலையமைப்பை கொண்டுள்ளது. 2,100க்கும் மேற்பட்ட சேவைப் பங்காளர்களின் மூலம் ‘கோல்ட் ஸ்டாண்டர்ட் சர்வீஸ்’ திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் புளூ ஸ்டார் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் B. தியாகராஜன் கூறுகையில், “இந்தியாவில் குளிர்விப்பு சாதனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. எதிர்காலத்தில் சுமார் 150 மில்லியன் குடும்பங்கள் ஏசி வாங்கும் திறனை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறிவரும் வாடிக்கையாளர் தேவைகளுக்கு ஏற்ப எங்களின் புதிய தயாரிப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குடியிருப்பு மற்றும் வணிகத் துறைகளில் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்தி அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி புளூ ஸ்டார் முன்னேற தயாராக உள்ளது,” என்றார்.

